PT 11.8.10

இவற்றைப் பாடுக: வினைகள் சாரா

2031 குன்றமெடுத்து ஆநிரைகாத்தவன்தன்னை *
மன்றில்புகழ் மங்கைமன்கலிகன்றிசொல் *
ஒன்றுநின்றஒன்பதும் வல்லவர்தம்மேல் *
என்றும்வினையாயின சாரகில்லாவே. (2)
2031 ## kuṉṟam ĕṭuttu * ā-nirai kāttavaṉ-taṉṉai *
maṉṟil pukazh * maṅkai maṉ kalikaṉṟi cŏl **
ŏṉṟu niṉṟa ŏṉpatum * vallavar-tammel *
ĕṉṟum viṉai āyiṉa * cārakillāve-10

Ragam

Mānchi / மாஞ்சி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

2031. Kaliyan, king of famous Thirumangai, composed ten pāsurams praising the cowherd, the god who protected the cows from the storm by carrying Govardhanā mountain as an umbrella. If devotees learn and recite these ten pāsurams they will never experience the results of their karmā. (1083)

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
குன்றம் எடுத்து மலையை குடையாக எடுத்து; ஆ நிரை பசுக்களை; காத்தவன் தன்னை காத்தவனைக் குறித்து; மன்றில் நாற்சந்திகளில்; புகழ் புகழுடைய; மங்கை மன் திருமங்கை மன்னனான; கலிகன்றி திருமங்கை ஆழ்வார்; சொல் அருளிச்செய்த; ஒன்று நின்ற ஒன்பதும் பத்துப் பாசுரங்களையும்; வல்லவர் தம்மேல் ஓத வல்லவர்கள் பக்கலிலே; வினை ஆயின பாபங்களானவை; என்றும் எக்காலத்திலும்; சாரகில்லாவே அணுகவே மாட்டா