PT 11.8.1

ஆற்றாங்கரை மரம் போல் அஞ்சுகிறேன்

2022 மாற்றமுள ஆகிலும்சொல்லுவன் * மக்கள்
தோற்றக்குழி தோற்றுவிப்பாய்கொல்? என்றுஇன்னம் *
ஆற்றங்கரைவாழ்மரம்போல் அஞ்சுகின்றேன் *
நாற்றச்சுவை ஊறுஒலியாகியநம்பீ! (2)
2022 ## மாற்றம் உள * ஆகிலும் சொல்லுவன் * மக்கள்
தோற்றக் குழி * தோற்றுவிப்பாய்கொல் என்று இன்னம் **
ஆற்றங்கரை வாழ் மரம்போல் * அஞ்சுகின்றேன் *
நாற்றம் சுவை * ஊறு ஒலி ஆகிய நம்பீ 1
2022 ## māṟṟam ul̤a * ākilum cŏlluvaṉ * makkal̤
toṟṟak kuzhi * toṟṟuvippāykŏl ĕṉṟu iṉṉam- **
āṟṟaṅkarai vāzh marampol- * añcukiṉṟeṉ *
nāṟṟam cuvai * ūṟu ŏli ākiya nampī -1

Ragam

Mānchi / மாஞ்சி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

2022. O Nambi, you are smell, taste, touch and sound. When I complain that you have not given me your grace, you may say that I did not do the right things. I will say one thing to you. Do not make me to go into a womb and be born again. I am afraid that I will be like a tree on the bank of a river that may fall at any time.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
நாற்றம் கந்தம்; சுவை ஊறு ரஸம் ஸ்பர்சம்; ஒலி சப்தம் ஆகிய; ஆகிய குணங்களாக நின்ற; நம்பீ! பெருமானே!; மாற்றம் உன்னிடம் கூறும் வார்த்தைக்கு; உள மறு வார்த்தை உண்டு; ஆகிலும் நான் கூறுவதற்கும் நீ பதில் கூறினால்; சொல்லுவன் ஆகிலும் பதில் கூறுகிறேன்; மக்கள் உன்னைச் சரணமடையாத மக்கள்; தோற்றக் குழி கர்ப்பக் குழியில்; இன்னம் இதுக்கு மேலும் இன்னமும்; தோற்று பிறக்கும்படி; விப்பாய்கொல் செய்வாயோ என்று கருதி பயந்து; என்று நீ அன்றி வேறு கதி இல்லை; ஆற்றங்கரை ஆற்றங்கரையில்; வாழ் மரம் போல் இருக்கும் மரம் போல்; அஞ்சுகின்றேன் பயப்படுகிறேன் [பயத்துக்குக் காரணம் - ஐந்து ஞானேந்த்ரியமும் ஐந்து கர்மேந்த்ரியமும் மனதும் ஆகியவை.]

Āchārya Vyākyānam

மாற்றமுள வாகிலும் சொல்லுவன் மக்கள் தோற்றக் குழி தோற்றுவிப்பாய்  கொல் என்று இன்னம் ஆற்றங்கரை வாழ் மரம் போல் அஞ்சுகின்றேன் நாற்றச் சுவை யூறொலியாகிய நம்பீ—11-8-1-

(கண்ணுக்கு உண்டான ரூப அனுபவம் சொல்லாமல் விட்டது – பேதை பாலகன் -அதாகும் போல் -இவர் அது கூடச் சொல்லாமல் விட்டார் மாற்றமுள வாகிலும்-அவனுக்கு மாற்றங்கள் பல சொல்லலாம் – சொல்வதற்கு உத்தரம் -யுக்தி பிரதி யுக்தி -அஞ்சுகிறேன்

+ Read more