PT 11.7.6

கண்ணனை எண்ணாத உள்ளம் உள்ளமல்ல

2017 கள்ளார்துழாயும் கணவலரும்கூவிளையும் *
முள்ளார்முளரியும் ஆம்பலுமுன்கண்டக்கால் *
புள்ளாய்ஓரேனமாய்ப் புக்கிடந்தான்பொன்னடிக்கென்று *
உள்ளாதாருள்ளத்தை உள்ளமாக்கொள்ளோமே.
2017 kal̤ ār tuzhāyum * kaṇavalarum kūvil̤aiyum *
mul̤ ār mul̤ariyum * āmpalum muṉ kaṇṭakkāl **
pul̤ āy or eṉam āyp * pukku iṭantāṉ pŏṉ aṭikku ĕṉṟu *
ul̤l̤ātār ul̤l̤attai * ul̤l̤amāk kŏl̤l̤ome-6

Ragam

Varāḷi / வராளி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Reference Scriptures

BV. 9-26

Simple Translation

2017. When devotees see thulasi dripping with honey, fresh alari flowers, kuvilai flowers, thorny mulari blossoms and ambal flowers, if they do not think in their hearts of the golden feet of him who took the forms of a swan to bring the Vedās to the earth and who became a boar that split open the earth to bring the earth goddess from the underworld, then their hearts are not truly hearts.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கள் ஆர் தேன் பொருந்திய; துழாயும் துளசியையும்; கணவலரும் அலரிப் பூவையும்; கூவிளையும் பில்வ பத்திரத்தையும்; முள் ஆர் முட்கள் நிரம்பிய; முளரியும் தாமரைப் பூவையும்; ஆம்பலும் ஆம்பல் மலரையும்; முன் கண்டக்கால் கண்ணெதிரில் பார்த்தால்; புள் ஆய் ஹம்ஸாவதாரம் செய்தவனாய்; ஓர் ஏனம் வராஹ அவதாரம்; ஆய் செய்தவனாய்; புக்கு பூமியை உள்ளே புகுந்து; இடந்தான் எடுத்துக் காத்த பெருமானின்; பொன் பொன் போன்றை; அடிக்கு என்று திருவடிகளுக்கே உரியது என்று; உள்ளாதார் நினைக்காதவர்களின்; உள்ளத்தை நெஞ்சை மனதை; உள்ளமா மனதாக; கொள்ளோமே கருத மாட்டோம்