PT 11.4.10

இவற்றைப் பாடுக: தேவருலகை ஆளலாம்

1991 கொலைகெழுசெம்முகத்தகளிறொன்றுகொன்று
கொடியோனிலங்கைபொடியா *
சிலைகெழுசெஞ்சரங்கள்செலவுய்த்த நங்கள்
திருமாலை, வேலைபுடைசூழ் *
கலிகெழுமாடவீதி வயல்மங்கைமன்னு
கலிகன்றிசொன்னபனுவல் *
ஒலிகெழுபாடல் பாடியுழல்கின்றதொண்டரவர்
ஆள்வர்உம்பருலகே. (2)
1991 ## kŏlai kĕzhu cĕm mukatta kal̤iṟu ŏṉṟu kŏṉṟu *
kŏṭiyoṉ ilaṅkai pŏṭiyā *
cilai kĕzhu cĕñ caraṅkal̤ cĕla uytta naṅkal̤ *
tirumālai velai puṭai cūzh **
kali kĕzhu māṭa vīti vayal maṅkai maṉṉu *
kalikaṉṟi cŏṉṉa paṉuval *
ŏli kĕzhu pāṭal pāṭi uzhalkiṉṟa tŏṇṭar *
avar āl̤var umpar ulake

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

1991. He killed the murderous, angry-faced elephant and he destroyed Lankā ruled by the cruel Rākshasa king, shooting mighty arrows from his bow. Kaliyan, the king of Thirumangai surrounded with fields and streets with rich palaces composed ten pāsurams on the god. If devotees sing these musical poems and worship him, they will go to the world of the gods and rule there.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கொலை கெழு கொலை செய்ய வல்ல; செம் முகத்த சிவந்த முகத்தையுடைய; களிறு ஒன்று குவலயாபீட யானை ஒன்றை; கொன்று கொன்று; கொடியோன் கொடியவனான ராவணனின்; இலங்கை இலங்கையை; பொடியா பொடியாக்க; சிலை கெழு வில்லைப் பொருத்தி; செஞ் சரங்கள் நெருப்புப் போன்ற அம்புகளை; செல உய்த்த பிரயோகித்த; நங்கள் நம்முடைய; திருமாலை எம்பெருமானைக் குறித்து; வேலை நாற்புறமும்; புடை சூழ் காவேரியால் சூழ்ந்ததும்; கலி கெழு வலிமைமிக்க; மாட வீதி மாடவீதிகளாலும்; வயல் வயல்களாலும் சூழ்ந்த; மங்கை மன்னு திருமங்கையிலிருக்கும்; கலிகன்றி திருமங்கை ஆழ்வார்; சொன்ன பனுவல் அருளிச்செய்த; ஒலி கெழு சிறந்த சொற்கள் நிறைந்த; பாடல் பாடி பாசுரங்களை வாயாரப் பாடி; உழல்கின்ற ஓதுகின்ற; தொண்டர் தொண்டர்கள்; அவர் உம்பர் உலகே பரமபதத்தை; ஆள்வர் ஆள்வர்