PT 11.2.9

மலர் தூவித் தொழுதால் கண்ணனைக் காணலாமோ!

1970 காமன்கணைக்குஓரிலக்கமாய் நலத்தில்மிகு *
பூமருகோல நம்பெண்மைசிந்தித்திராதுபோய் *
தூமலர்நீர்கொடு தோழி! நாம்தொழுதேத்தினால் *
கார்முகில்வண்ணரைக் கண்களால்காணலாங்கொலோ?
1970 காமன் கணைக்கு ஓர் இலக்கம் ஆய் * நலத்தின் மிகு *
பூ மரு கோலம் * நம் பெண்மை சிந்தித்து இராது போய் **
தூ மலர் நீர் கொடு * தோழி நாம் தொழுது ஏத்தினால் *
கார் முகில் வண்ணரைக் * கண்களால் காணல் ஆம்கொலோ?
1970 kāmaṉ kaṇaikku or ilakkam āy * nalattiṉ miku *
pū maru kolam * nam pĕṇmai cintittu irātu poy **
tū malar nīr kŏṭu * tozhi nām tŏzhutu ettiṉāl *
kār mukil vaṇṇaraik * kaṇkal̤āl kāṇal āmkŏlo?

Ragam

Kauḷipandu / கௌளிபந்து

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1970. She says, “O friend, Kāma shoots his arrows and makes us suffer. We shouldn’t think that we are just women and that we are weak. We should carry pure water and flowers and go where he stays. If we worship and praise him, won’t we be able to see the dark cloud-colored god with our eyes?”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
தோழி! தோழீ!; காமன் கணைக்கு மன்மதபாணங்களுக்கு; ஓர் இலக்கம் இலக்காகி; ஆய் துன்புறுவதைக் காட்டிலும்; நலத்தின் மிகு ஆத்மகுணங்களாலும்; பூ மரு கோலம் ஒப்பனை அழகாலும்; நம் பெண்மை நம் பெண்மையை; சிந்தித்து சிந்தித்து; இராது இங்கேயே இருந்திடாமல்; போய் அவன் இருக்குமிடம் போய்; தூ மலர் மணம் மிக்க தூய மலர்களாலும்; நீர் கொடு தீர்த்தங்களையும் கொண்டு; நாம் தொழுது நாம் தொழுது; ஏத்தினால் வணங்கினால்; கார் முகில் காளமேகம் போன்ற; வண்ணரை நிறமுடைய பெருமானை; கண்களால் கண்களாலே; காணல் காண; ஆம்கொலோ? பெறுவோமோ?