PT 11.2.7

மன்மதன் நெருப்பை வீசுகின்றானே!

1968 காமன்தனக்குமுரையல்லேன் கடல்வண்ணனார் *
மாமணவாளர் எனக்குத்தானும்மகன்சொல்லில் *
யாமங்கள்தோறுஎரிவீசும் என்னிளங்கொங்கைகள் *
மாமணிவண்ணர் திறத்தவாய்வளர்கின்றவே.
1968 kāmaṉ-taṉakku muṟai alleṉ * kaṭal vaṇṇaṉār *
mā maṇavāl̤ar * ĕṉakkut tāṉum makaṉ cŏllil **
yāmaṅkal̤ toṟu ĕri vīcum * ĕṉ il̤aṅ kŏṅkaikal̤ *
mā maṇi vaṇṇar * tiṟattavāy val̤arkiṉṟave

Ragam

Kauḷipandu / கௌளிபந்து

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1968. She says, “It is not fair that Kāma who is no relative of mine causes me pain, yet the ocean-colored god is my beloved and if Kāma is his son, he is also my son. He shoots the fire of love at me every night and my young breasts swell out loving the precious sapphire-colored lord. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
காமன் மன்மதனால்; தனக்கு நான் துயரப்பட; முறை முறையுடையேன்; அல்லேன் அல்லேன்; சொல்லில் ஏனெனில்; கடல் கடல் வண்ணனான; வண்ணனார் கண்ணன்; மா மணவாளர் எனக்கு நாயகன் என்றால்; எனக்குத் தானும் மன்மதனோவெனில்; மகன் எனக்கு மகன்; யாமங்கள் தோறு எப்போதும்; எரி வீசும் நெருப்பை வீசுகிறான்; என் இளம் எனது; கொங்கைகள் ஸ்தனங்களோ வென்னில்; மா மணி நீலமணி; வண்ணர் வண்ணரான அப்பெருமானின்; திறத்தவாய் திறத்தில் பயனடையவே; வளர்கின்றவே வளர்கின்றன