PT 11.2.1

அன்றிலைத் துரத்தவார் யார்?

1962 குன்றமெடுத்துமழைதடுத்து இளையாரொடும் *
மன்றில்குரவையிணைந்தமால் என்னைமால்செய்தான் *
முன்றில்தனிநின்றபெண்ணைமேல் கிடந் தீர்கின்ற *
அன்றிலின்கூட்டைப் பிரிக்ககிற்பவர்ஆர்கொலோ? (2)
1962 ## kuṉṟam ĕṭuttu mazhai taṭuttu * il̤aiyārŏṭum *
maṉṟil kuravai piṇainta māl * ĕṉṉai mālcĕytāṉ **
muṉṟil taṉi niṉṟa pĕṇṇaimel * kiṭantu īrkiṉṟa *
aṉṟiliṉ kūṭṭaip * pirikkakiṟpavar ārkŏlo?

Ragam

Kauḷipandu / கௌளிபந்து

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1962. She says, “The lord who carried Govardhanā mountain as an umbrella and blocked the storm, saving the cows and the cowherds, and who danced the Kuravai dance with young girls in the mandram has enchanted me. The andril bird on the palm tree in the front yard coos and hurts me. Who can remove its nest so it will not coo and call its absent mate?”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
குன்றம் கோவர்த்தனமலையை; எடுத்து குடையாகத் தூக்கி; மழை தடுத்து மழை தடுத்தவனும்; மன்றில் நாற்சந்தியில்; இளையாரொடும் இளம் பெண்களோடு; குரவை குரவை; பிணைந்த கூத்தாடினவனுமான; மால் பெருமான்; என்னை மால் என்னை மதிமயங்க; செய்தான் பண்ணிவிட்டான்; முன்றில் வாசலில்; தனி நின்ற தனியேநின்ற; பெண்ணைமேல் பனைமரத்தின் மீது; கிடந்து இருந்து கொண்டு; ஈர்கின்ற என்னைத் துன்புறுத்தும்; அன்றிலின் அன்றில் பறவையின்; கூட்டை கூட்டிலிருந்து பறவைகளை; பிரிக்ககிற்பவர் பிரித்துவிடவல்லவர்; ஆர்கொலோ? யாரேனுமுண்டோ?