PT 10.8.9

திருமகளும் மண்மகளும் காத்திருக்கின்றனரே!

1930 ஆடியசைந்து ஆய்மடவாரொடுநீபோய் *
கூடிக்குரவைபிணை கோமளப்பிள்ளாய் *
தேடித்திருமாமகள் மண்மகள்நிற்ப *
ஏடி! இதுவென்? இதுவென்? இதுவென்னோ?
1930 āṭi acaintu * āy maṭavārŏṭu nī poy *
kūṭik kuravai piṇai * komal̤ap pil̤l̤āy **
teṭit tiru mā makal̤ * maṇmakal̤ niṟpa *
eṭi itu ĕṉ? * itu ĕṉ? itu ĕṉṉo?-9

Ragam

Usēni / உசேனி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1930. A cowherd girl says to Kannan. “You are a handsome young man. The goddess of wealth Lakshmi and the earth goddess stay with you, but you join the beautiful cowherd girls and dance the kuravai dance with them. O my friend, do you see this? What is this? What is this? What is this?”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
திரு மா மகள் திரு மகளும்; மண்மகள் மண்மகளும்; தேடி நிற்ப தேடிக் கொண்டிருக்க; ஆடி அசைந்து ஆடி அசைந்து; ஆய் ஆயர்பாடி; மடவாரொடு பெண்களோடு; நீ போய் கூடி நீ போய் கூடி; குரவை பிணை ராஸக்ரீடை நடத்தின; கோமள கோமள; பிள்ளாய்! பிள்ளாய் என்று காலைப் பிடித்தார்; ஏடி! இது என்? தோழீ இவரை உள்ளே விட்டது யார்?; இது என்? ராஸக்கிரீடை ஆடினவரே நீர் எதற்கு இங்கு வந்தீர்?; இது என்னோ? தோழீ இவரை ஏன் உள்ளே விட்டாய்?