PT 10.8.7

சொன்னபடி வருவதில்லை. காரணம் என்ன?

1928 மல்லேபொருததிரள்தோள் மணவாளீர்! *
அல்லேயறிந்தோம் நும்மனத்தின்கருத்தை *
சொல்லாதொழியீர் சொன்னபோதினால்வாரீர் *
எல்லே! இதுவென்? இதுவென்? இதுவென்னோ?
1928 malle pŏruta tiral̤ * tol̤ maṇavāl̤īr *
alle aṟintom * num maṉattiṉ karuttai **
cŏllātu ŏzhiyīr * cŏṉṉapotiṉāl vārīr *
ĕlle itu ĕṉ? * itu ĕṉ? itu ĕṉṉo?-7

Ragam

Usēni / உசேனி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1928. A cowherd girl says to Kannan, “You, our beloved, fought the wrestlers with your strong arms. Last night we already knew what you wanted. You always go away without telling us when you will come back, and if you do tell us, you never come when you said you would. O god! What is this? What is this? What is this?”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மல்லே பொருத மல்லர்களுடன் போர் புரிந்த; திரள் தோள் திரண்ட தோள்களையுடைய; மணவாளீர்! மணவாளனே!; நும் மனத்தின் கருத்தை உம் மனதிலுள்ள கருத்தை; அல்லே அறிந்தோம் நேற்றிரவே அறிந்தோம்; சொல்லாது எப்போது வருவேன் என்று சொல்லாமலே; ஒழியீர் போகிறீர்; சொன்னபோதினால் சொன்னாலும்; வாரீர் காலம் கடந்து தான் வருகிறீர் இல்லை; எல்லே! இது என்ன ஆச்சர்யம்; இது என்? சொன்னபோதே ஏன் வரவில்லை?; இது என்? குறித்த காலத்தில் வராதது ஏன்?; இது என்னோ? அபராதமே பண்ணாதவர் போல் ஏன் வந்தீர்?