PT 10.8.6

வில்லுடன் வந்தீர்! இஃது என்ன செயல்?

1927 ஆனாயரும் ஆநிரையும் அங்கொழிய *
கூனாயதோர் கொற்றவில்லொன்றுகையேந்தி *
போனார்இருந்தாரையும் பார்த்துப்புகுதீர் *
ஏனோர்கள்முன்னென்? இதுவென்? இதுவென்னோ?
1927 āṉ-āyarum * ā-niraiyum aṅku ŏzhiya *
kūṉ āyatu or * kŏṟṟa vil ŏṉṟu kai enti **
poṉār iruntāraiyum * pārttup pukutīr *
eṉorkal̤ muṉ ĕṉ? * itu ĕṉ? itu ĕṉṉo? 6

Ragam

Usēni / உசேனி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1927. A cowherd girl says to Kannan. “You left the cowherds and their cows, carrying a curved victorious bow, and now you look to see if anyone is around and enter our homes when no one is there. Why are you doing this where others might see? What is this? What is this?”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஆன் ஆயரும் பசு மேய்க்கும் ஆயர் பிள்ளைகளும்; ஆ நிரையும் பசுக்களும் இங்கு; அங்கு ஒழிய இல்லாமல் வேறு இடத்தில் இருக்க; கூன் ஆயது ஓர் வளைந்த ஒரு; கொற்ற வில் ஒன்று ஒப்பற்ற வில்லை; கை ஏந்தி கையில் ஏந்திக் கொண்டு; போனார் போவோர்களையும்; இருந்தாரையும் இருப்பவர்களையும்; பார்த்து பார்ப்பவர் போல்; புகுதீர் கள்ளத்தனமாக உள்ளே புகுந்தீரே; ஏனோர்கள் முன் என்? இங்கென்ன வேலை உமக்கு; இது என்? ஆயுதத்துடன் இங்கே எதற்கு வந்தீர்?; இது என்? பசுக்களும் பிள்ளைகளும் அங்கிருக்க இங்கு எதற்கு?; இது என்? கள்ளத்தனமாக உள்ளே எதற்கு புகுந்தீர்?