PT 10.8.4

இரவில் இல்லம் புகுந்த காரணம் என்ன?

1925 நாமம்பலவுமுடை நாரணநம்பீ! *
தாமத்துளவம் மிகநாறிடுகின்றீர் *
காமனெனப்பாடிவந்து இல்லம்புகுந்தீர் *
ஏமத்துஇதுவென்? இதுவென்? இதுவென்னோ?
1925 nāmam palavum uṭai * nāraṇa nampī *
tāmat tul̤avam * mika nāṟiṭukiṉṟīr **
kāmaṉ ĕṉap pāṭi vantu * illam pukuntīr *
emattu-itu ĕṉ? * itu ĕṉ? itu ĕṉṉo?-4

Ragam

Usēni / உசேனி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1925. A cowherd girl says to Kannan, “You are the sweet Nāranan with many names adorned with thulasi garlands. You come like Kāma, the god of love, sing songs and enter our homes. Why are you doing this in the middle of the night? What is this? What is this?”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பலவும் பல பல; நாமம் உடை நாமங்களையுடையவரும்; நம்பீ குணங்களையுடையவருமான; நாரண நாராயண நம்பீயே!; தாம துளவம் மிக துளசி மாலையின் மணம்; நாறிடுகின்றீர் மூக்கைத் துளைக்கிறது; ஏமத்து இரவுப் பொழுதில்; காமன் என மன்மதனோ என்னும்படி; பாடி வந்து பாட்டு பாடிக் கொண்டு வந்து; இல்லம் புகுந்தீர் வீட்டுக்குள் புகுந்தீரே!; இது என்? இரவுப் பொழுதில் ஏன் வந்தீர்?; இது என்? பாடிக் கொண்டு எதற்காக இங்கு வந்தீர்?; இது என்? துளசி மாலை தரித்து எதற்கு இங்கு வந்தீர்?