PT 10.8.3

என் வீட்டில் புகுந்தீர்! இதன் கருத்து யாது?

1924 கருளக்கொடியொன்றுடையீர்! தனிப்பாகீர்! *
உருளச்சகடமது உறக்கில்நிமிர்த்தீர்! *
மருளைக்கொடுபாடிவந்து இல்லம்புகுந்தீர் *
இருளத்துஇதுவென்? இதுவென்? இதுவென்னோ?
1924 karul̤ak kŏṭi ŏṉṟu uṭaiyīr * taṉip pākīr *
urul̤ac cakaṭam-atu * uṟukkil nimirttīr **
marul̤aikkŏṭu pāṭi vantu * illam pukuntīr *
irul̤attu itu ĕṉ? * itu ĕṉ? itu ĕṉṉo?-3

Ragam

Usēni / உசேனி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1924. A cowherd girl says to Kannan, “You, matchless, carry an eagle banner and you killed Sakātāsuran when he came as a cart, and now you come into our home in our village and frighten us. What are you doing in the night like this? What is this? What is this?”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கருளக் கொடி கருடக் கொடி; ஒன்று உடையவரே; உடையீர்! அந்த கருடனை; தனிப் பாகீர்! தனியாக நடத்த வல்லவரே!; உறக்கில் கள்ள நித்திரையில்; சகடம் அது சகடாஸுரனாக வந்தவனை சகடம்; உருள நிமிர்த்தீர்! உருள காலை நிமிர்த்தியவரே!; இருளத்து இரவுப் பொழுதில்; மருளைக்கொடு பெண்கள் மயங்கும்படி; பாடி மாயாமாளவகௌளம் பாடிகொண்டு; வந்து இல்லம் வந்து வீட்டுக்குள்; புகுந்தீர்! புகுந்தீரே!; இது என்? இரவுப் பொழுதில் ஏன் வந்தீர்?; இது என்? பாடிகொண்டு எதற்கு வந்தீர்?; இது என்? வீட்டுக்குள் ஏன் புகுந்தீர்?