PT 10.8.2

கதவின் புறமே வந்து நின்றீர்! நீ யார்?

1923 துவராடையுடுத்து ஒருசெண்டுசிலுப்பி *
கவராகமுடித்துக் கலிக்கச்சுக்கட்டி *
சுவரார்கதவின்புறமே வந்துநின்றீர் *
இவரார்? இதுவென்? இதுவென்? இதுவென்னோ?
1923 tuvar āṭai uṭuttu * ŏru cĕṇṭu ciluppi *
kavar āka muṭittuk * kalik kaccuk kaṭṭi **
cuvar ār kataviṉ puṟame * vantu niṉṟīr *
ivar ār? itu ĕṉ? * itu ĕṉ? itu ĕṉṉo?-2

Ragam

Usēni / உசேனி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1923. A cowherd girl says to Kannan, “You wear an orange dress, your hair is tied up in a knot and you have tied a kachu around your waist. You come near the door in the backyard and stand there. What do you want? What is this? What is this?”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
துவர் சிவப்பு நிற; ஆடை உடுத்து ஆடை உடுத்தி; ஒரு செண்டு ஒரு செண்டையும்; சிலுப்பி கையில் அசைத்துக் கொண்டு; கவர் ஆக முடித்து முடியை வாரி முடித்து; கலிக் கச்சு வலிதான கச்சுப் பட்டையை; கட்டி அறையில் கட்டிக் கொண்டு; சுவர் ஆர் சுவரோடிருக்கும்; கதவின் புறமே கதவின் பக்கமாக; வந்து நின்றீர் வந்து நிற்கும்; இவர் ஆர்? தோழியைப் பார்த்து இவர் யார் என்கிறாள்?; இது என்? செண்டு அசைத்துக் கொண்டு வருவானேன்?; இது என்? கதவின் பக்கமாக நிற்க வேண்டுமோ?; இது என்னோ? கதவைத் தள்ளிக் கொண்டு வரலாகாதோ?