PT 10.8.1

இப்பக்கம் எதற்காக நின்றீர்!

1922 காதில்கடிப்பிட்டுக் கலிங்கமுடுத்து *
தாதுநல்லதண்ணந்துழாய் கொடணிந்து *
போதுமறுத்துப் புறமேவந்துநின்றீர் *
ஏதுக்குஇதுவென்? இதுவென்? இதுவென்னோ? (2)
1922 ## kātil kaṭippu iṭṭuk * kaliṅkam uṭuttu *
tātu nalla * taṇ am tuzhāykŏṭu aṇintu **
potu maṟuttup * puṟame vantu niṉṟīr *
etukku? itu ĕṉ? * itu ĕṉ? itu ĕṉṉo?-1

Ragam

Usēni / உசேனி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1922. A cowherd girl says to Kannan, “You didn’t come on the day you said you would to see me, but wearing earrings in your ears and lovely clothes on your waist and a cool tulasi garland shedding its pollen on your chest you come here now and stand behind me. What is this? What is this?”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
காதில் காதில்; கடிப்பு இட்டு குண்டலமணிந்து; கலிங்கம் கருப்பு ஆடை; உடுத்து உடுத்திக் கொண்டு; தாது நல்ல இதழுடன் கூடிய; தண் அம் குளிர்ந்த அழகிய; துழாய்கொடு அணிந்து துளசி மாலை அணிந்து; போது மறுத்து காலம் தாழ்ந்து; புறமே வந்து பின் புறத்தில் வந்து; நின்றீர் ஏதுக்கு? எதற்காக நின்றீர்?; இது என்? எதற்காக ஆடை ஆலங்காரத்துடன் வந்தீர்?; இது என்? காலம் தாழ்ந்து எதற்காக வந்தீர்?; இது என்? பின் புறத்தில் வந்து எதற்கு நிற்கிறீர்?