PT 10.3.7

அரக்கர்களே! அனுமனை வாழ்த்தி ஆடுங்கள்

1874 மாற்றமாவதுஇத்தனையே வம்மின்அரக்கருள்ளீர்! *
சீற்றம்நும்மேல்தீரவேண்டில் சேவகம்பேசாதே *
ஆற்றல்சான்றதொல்பிறப்பில் அநுமனைவாழ்கவென்று *
கூற்றமன்னார்காண ஆடீர் குழமணிதூரமே.
1874 māṟṟam āvatu ittaṉaiye * vammiṉ arakkar ul̤l̤īr *
cīṟṟam nummel tīra veṇṭiṉ * cevakam pecāte **
āṟṟal cāṉṟa tŏl piṟappil * anumaṉai vāzhka ĕṉṟu *
kūṟṟam aṉṉār kāṇa āṭīr- * kuzhamaṇitūrame-7

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

1874. “O Rākshasas, come, give up your thoughts of fighting with the monkeys. If you want Rāma and the others not to be angry with you do not speak heroic words. Heroic Hanuman has an ancient birth—let us praise him. Let us dance so that the monkey heroes who are as strong as Yama’s messengers can see us. Kuzhamani thuurame!”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அரக்கர் உள்ளீர்! அரக்கர்களே!; வம்மின் வாருங்கள் என்று மற்ற அரக்கர்களை; மாற்றம் ஆவது மாற்றத்துக்கு நீங்களும்; இத்தனையே எங்களைப் போல் சரணமடையுங்கள்; சீற்றம் நும்மேல் உங்கள் மேலுள்ள கோபம்; தீர வேண்டின் தீர வேண்டுமானால்; சேவகம் பேசாதே வீரம் பேசாமல்; தொல் பிறப்பின் பிறப்பிலிருந்தே; ஆற்றல் சான்ற வலிமையுடைய; அநுமனை வாழ்க என்று அநுமனை வாழ்க என்று; கூற்றம் அன்னார் யமனைப் போன்ற வானரர்கள்; காண கண்டு களிக்க; குழமணி தூரமே குழமணி தூரம் என்னும் தோற்றோரின் ஒரு வகை கூத்தை; ஆடீர் ஆடுங்கள்