PT 10.3.6

சுக்கிரீவனே! எம்மைக் கொல்ல வேண்டா

1873 கல்லின்முந்நீர்மாற்றிவந்து காவல்கடந்து * இலங்கை
அல்லல்செய்தான்உங்கள்கோமான் எம்மைஅமர்க்களத்து *
வெல்லகில்லாதுஅஞ்சினோங்காண் வெங்கதிரோன்சிறுவா! *
கொல்லவேண்டாஆடுகின்றோம் குழமணிதூரமே.
1873 kalliṉ munnīr māṟṟi vantu * kāval kaṭantu * ilaṅkai
allal cĕytāṉ uṅkal̤ komāṉ * ĕmmai amarkkal̤attu **
vĕllakillātu añciṉomkāṇ * vĕm katiroṉ ciṟuvā *
kŏllaveṇṭā āṭukiṉṟom- * kuzhamaṇitūrame-6

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

1873. “Your king constructed a bridge of stones across the ocean, went past all our guards and came to Lankā, afflicting us. We could not fight and conquer him. We are afraid of him. You are the son of hot sun. Do not kill us. We dance for you and ask your grace. Kuzhamani thuurame!”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
உங்கள் கோமான் உங்கள் மன்னன் ராமபிரான்; கல்லின் முந்நீர் மலைகளால் கடலில்; மாற்றி அணைகட்டி; இலங்கை இலங்கையிலுள்ள; காவல் அரண்களை; கடந்து வந்து கடந்து வந்து; அமர்க்களத்து யுத்தபூமியில்; எம்மை எங்களை; அல்லல் செய்தான் துன்புறுத்தினான்; வெம் கதிரோன் ஸூரியனின் புத்ரனான; சிறுவா! ஸுக்ரீவனே!; வெல்லகில்லாது உங்களை வெல்ல முடியாமல்; அஞ்சினோம் காண் பயப்படுகின்றோம்; கொல்லவேண்டா எங்களைக் கொல்லாதீர்கள்; குழமணி தூரமே குழமணி தூரம் என்னும் தோற்றோரின் ஒரு வகை கூத்தை; ஆடுகின்றோம் நாங்கள் ஆடுகின்றோம்