PT 10.3.5

இராமனைச் சேர்ந்தோரைப் பாடுகின்றோம்

1872 வென்றிதந்தோம்மானம்வேண்டோம் தானம்எமக்காக *
இன்றுதம்மின்எங்கள்வாணாள் எம்பெருமான்தமர்காள்! *
நின்றுகாணீர்கண்களார நீர்எம்மைக்கொல்லாதே *
குன்றுபோலஆடுகின்றோம் குழமணிதூரமே.
1872 vĕṉṟi tantom māṉam veṇṭom * tāṉam ĕmakku āka *
iṉṟu tammiṉ ĕṅkal̤ vāzhnāl̤ * ĕm pĕrumāṉ-tamarkāl̤ **
niṉṟu kāṇīr kaṇkal̤ āra * nīr ĕmmaik kŏllāte *
kuṉṟu pola āṭukiṉṟom- * kuzhamaṇitūrame-5

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

1872. “We lost the war and do not need any honor. Give us your grace today and our lives. You are our lords and relatives. Look at us. Do not kill us. We are big as mountains, and we dance for you. Kuzhamani thuurame!”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
எம் பெருமான் ராம பக்தர்களான; தமர்காள்! வாநர வீரர்களே!; வென்றி வெற்றியை உங்களுக்கு; தந்தோம் கொடுத்தோம்; மானம் வேண்டோம் கர்வத்தைக் கைவிட்டோம்; எங்கள் வாழ் நாள் எங்களுடைய ஆயுளை; தானம் எமக்காக தானமாக எங்களுக்கு; இன்று தம்மின் கொடுத்து விடுங்கள்; நீர் எம்மை நீங்கள் எங்களை; கொல்லாதே கொல்லாமல்; குன்று போல குன்று போல்; ஆடுகின்றோம் நின்று நாங்கள் ஆடும்; குழமணி தூரமே குழமணி தூரம் என்னும் தோற்றோரின் ஒரு வகை கூத்தை; கண்கள் ஆர கண்ணார; நின்று காணீர் கண்டு களியுங்கள்