PT 10.3.4

இலக்குவனைப் புகழ்ந்து பாடுகின்றோம்

1871 மணங்கள்நாறும்வார்குழலார் மாதர்களாதரத்தை *
புணர்ந்தசிந்தைப்புன்மையாளன் பொன்றவரிசிலையால் *
கணங்களுண்ணவாளியாண்ட காவலனுக்கிளையோன் *
குணங்கள்பாடிஆடுகின்றோம் குழமணிதூரமே.
1871 maṇaṅkal̤ nāṟum vār kuzhalār * mātarkal̤ ātarattai *
puṇarnta cintaip puṉmaiyāl̤aṉ * pŏṉṟa vari cilaiyāl **
kaṇaṅkal̤ uṇṇa vāl̤i āṇṭa * kāvalaṉukku il̤aiyoṉ *
kuṇaṅkal̤ pāṭi āṭukiṉṟom- * kuzhamaṇitūrame-4

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

1871. “Evil-minded Rāvana desired fragrant-haired Sita and Rāma killed him. We praise the younger brother of Rāma, Lakshmana, valorous in victory, who killed the Rākshasas by bending his bow and leaving them for the ghouls on the battlefield to eat. Kuzhamani thuurame!”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மணங்கள் நாறும் மணம் மிக்க; வார் குழலார்கள் நீண்ட கூந்தலையுடைய; மாதர்கள் பெண்கள் விஷயத்தில்; ஆதரத்தை ஆசையை; புணர்ந்த சிந்தை விடாத மனமுடைய; புன்மையாளன் நீசனான இராவணன்; பொன்ற அழியும்படியும்; கணங்கள் உண்ண பேய் பிசாசுகள் உண்ண; வரி சிலையால் அழகிய வில்லிலே; வாளி ஆண்ட அம்புகளைப் பிரயோகித்த; காவலனுக்கு எம்பெருமானின்; இளையோன் தம்பி லக்ஷ்மணனின்; குணங்கள் பாடி குணங்களைப் பாடி நாங்கள்; குழமணி தூரமே குழமணி தூரம் என்னும் தோற்றோரின் ஒரு வகை கூத்தை; ஆடுகின்றோம் ஆடுகின்றோம்