(ஸ்ரீ ராம நாம சங்கீர்த்தனம் -மிருத சஞ்சீவனம் -அவ்வளவும் வேண்டாம் -அடிக்காமல் இருக்கவே இங்கு சக்கரவர்த்தி திருமகன் திரு நாமம் சொல்லி ஏத்துகின்றார்கள் -அவன் உகந்த திரு நாமம் என்று -)
ஏத்துகின்றோம் நாத்தழும்ப இராமன் திருநாமம் சோத்த நம்பி சுக்ரீவா யும்மைத் தொழுகின்றோம் வார்த்தை பேசீர் எம்மை யுங்கள் வானரம் கொல்லாமே கூத்தர் போலே ஆடுகின்றோம் குழமணி தூரமே –10-3-1-
(யுங்கள்