PT 1.6.5

இரந்தவர்க்கு இல்லை என்று சொல்லாதீர்கள்

1002 இடும்பையாலடர்ப்புண்டிடுமினோதுற்றென்னு
இரந்தவர்க்கில்லையேயென்று *
நெடுஞ்சொலால்மறுத்தநீசனேன்அந்தோ!
நினைக்கிலேன்வினைப்பயன்தன்னை *
கடுஞ்சொலார்கடியார்காலனார்தமரால்
படுவதோர்கொடுமிறைக்குஅஞ்சி *
நடுங்கிநான்வந்துஉன்திருவடியடைந்தேன்
நைமிசாரணியத்துள்எந்தாய்!
PT.1.6.5
1002 iṭumpaiyāl aṭarppuṇṭu iṭumiṉo tuṟṟu ĕṉṟu * irantavarkku illaiye ĕṉṟu *
nĕṭuñ cŏlāl maṟutta nīcaṉeṉ anto * niṉaikkileṉ viṉaip payaṉ taṉṉai **
kaṭuñ cŏlār kaṭiyār kālaṉār tamarāl * paṭuvatu or kŏṭu miṟaikku añci *
naṭuṅki nāṉ vantu uṉ tiruvaṭi aṭainteṉ * naimicāraṇiyattul̤ ĕntāy-5

Ragam

Kāmbhoji / காம்போதி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Saranagathi

Simple Translation

1002. O my Father in Naimiśāraṇyam! When the poor cried, “Just a little food, please!” I, a wretched soul, turned them away, not with silence, but with cruel words. I never once thought of the bitter fruits my sins would bring. But now I tremble, fearing the torment Yama’s fierce messengers bring, their harsh words, their violent ways. Shaken by this thought, I have come and surrendered at Your sacred feet.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நைமிசாரணியத்துள் நைமிசாரணியத்தில் இருக்கும்; எந்தாய்! என் தந்தையே!; இடும்பையால் ஏழ்மையினால்; அடர்ப்புண்டு கஷ்டப்பட்டு; ஓ இடுமின் துற்று ஐயோ! ஒரு கவளம் கொடுங்கோள்; என்று என்று கதறி; இரந்தவர்க்கு பிச்சை கேட்டவர்களுக்கு; இல்லையே என்று இல்லை யென்று சொல்லி; நெடுஞ் சொலால் மறுத்த கடும் சொல்லாலே மறுத்த; நீசனேன் அந்தோ! நீசனாகிய நான் ஐயோ!; வினை பாபங்களுக்கு; பயன் தன்னை நேரக்கூடிய பலன்களை; நினைக்கிலேன் மனதாலும் நினைக்கவில்லை; கடுஞ் சொலார் கடும் சொற்களையும்; கடியார் கடும் செய்கைகளையுமுடைய; காலனார் தமரால் யமபடர்களாலே; படுவது ஓர் கொடு உண்டாகக் கூடிய வேதனைகளை; மிறைக்கு நினைத்து; அஞ்சி நடுங்கி அஞ்சி நடுங்கி; நான் வந்து நான் இங்கு வந்து; உன் திருவடி உன் திருவடிகளை; அடைந்தேன் சரணமடைந்தேன்
naimisāraṇiyaththul̤ mercifully residing in ṣrī naimiṣāraṇyam; endhāy ŏh my lord!; idumbaiyāl by poverty; adarppu uṇdu being tormented; thuṝu handful (of food at least); idumin give; ŏ enṛu Crying out -ŏh- revealing their poverty; irandhavarkku for those who begged; illaiyĕ enṛu not having (anything to give you); nedum solāl with harsh words; maṛuththa refused; nīsanĕn very lowly; nān ī, the servitor; andhŏ alas!; vinaip payan thannai the result of the sins (which were committed previously); ninaikkilĕn not thinking about; kadum cruel; solār having words; kadiyār having cruel acts; kālanār thamarāl by the servitors of yama; paduvadhu experienced; ŏr kodu very cruel; miṛaikku thinking about the torture; anji fearing; nadungi shivering; un thiruvadi at your highness’ divine feet; vandhu adaindhĕn came and surrendered.