PMT 5.8

ஆறுகளெல்லாம் கடலினைத்தானே சேரும்?

695 தொக்கிலங்குயாறெல்லாம் பரந்தோடி * தொடுகடலே
புக்கன்றிப்புறம்நிற்கமாட்டாத மற்றவைபோல் *
மிக்கிலங்குமுகில்நிறத்தாய்! விற்றுவக்கோட்டம்மா! * உன்
புக்கிலங்குசீரல்லால் புக்கிலன்காண்புண்ணியனே!
695 tŏkku ilaṅki yāṟĕllām * parantu oṭi * tŏṭukaṭale
pukku aṉṟip puṟamniṟka * māṭṭāta maṟṟu avai pol **
mikku ilaṅku mukil-niṟattāy * vittuvakkoṭṭu ammā * uṉ
pukku ilaṅku cīr allāl * pukkilaṉ kāṇ puṇṇiyaṉe (8)

Ragam

Shankarābharaṇa / சங்கராபரண

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

695. O my father, lord of Vithuvakkodu, the rivers that swell, flood and flow everywhere cannot stay where they are but must join the ocean. I wish to join you as those rivers join the ocean. O virtuous one who have the color of a dark shining cloud. See, I have no way to find refuge except to come to you for your grace.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தொக்கு இலங்கி திரண்டு வருகிற; ஆறெல்லாம் நதிகளெல்லாம்; பரந்து ஓடி பரவியோடி; தொடுகடலே ஆழ்ந்த கடலிலே; புக்கு சேர்வதன்றி; அன்றிப் புறம் வேறிடத்தே; நிற்க மாட்டாத புகுந்து நிற்கமாட்டாதவை; மிக்கு இலங்கு மிகவும் பிரகாசமான; முகில் மேகம் போன்ற கரிய; நிறத்தாய்! நிறத்தவனே!; வித்துவக்கோட்டு வித்துவக்கோட்டு; அம்மா! அம்மா!; புண்ணியனே! புண்ணிய பிரானே!; மற்று அவை போல் அந்த ஆறுகள் போல; புக்கு இலங்கு புகுந்து பிரகாசிக்கின்ற; உன் சீர் உன் சீர்மையான குணங்கள்; அல்லால் அல்லாதவை எதிலும்; புக்கிலன் காண் ஈடுபடேன்