PMT 5.6

உன் சீர்தான் என் மனத்தை உருக்கும்

693 செந்தழலேவந்து அழலைச்செய்திடினும் * செங்கமலம்
அந்தரஞ்சேர்வெங்கதிரோற்கல்லால் அலராவால் *
வெந்துயர்வீட்டாவிடினும் விற்றுவக்கோட் டம்மா! * உன்
அந்தமில்சீர்க்கல்லால் அகங்குழையமாட்டேனே.
693 cĕntazhale vantu * azhalaic cĕytiṭiṉum * cĕṅkamalam
antaram cer * vĕṅkatiroṟku allāl alarāvāl **
vĕntuyar vīṭṭāviṭiṉum * vittuvakkoṭṭu ammā * uṉ
antamil cīrkku allāl * akam kuzhaiya māṭṭeṉe (6)

Ragam

Shankarābharaṇa / சங்கராபரண

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

693. You are my father, the lord of Vithuvakkodu! red lotuses don't bloom if the red-hot fire comes close and emits heat but they open their petals only to the warm rays of the glowing sun. I am like those lotuses. Even if you do not take away my sins and sorrows, my heart only melts for your endless grace and for nothing else.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
செந்தழலே சிவந்த நெருப்பு; வந்து அருகில் வந்து; அழலை உஷ்ணத்தை; செய்திடினும் உண்டாக்கினாலும்; செங்கமலம் செந்தாமரை மலர்; அந்தரம் சேர் ஆகாயத்தில் தோன்றும்; வெம் சூடான கிரணங்களுடைய; கதிரோற்கு சூரியனுக்கு; அல்லால் மலருமே யல்லாது; அலராவால் அந்த நெருப்புக்கு மலராது; வித்துவக்கோட்டு வித்துவக்கோட்டு; அம்மா! அம்மா!; வெந்துயர் கொடிய துயரங்களை; வீட்டாவிடினும் நீ போக்காவிட்டாலும்; உன் அந்தமில் உனது எல்லையில்லாத; சீர்க்கு உத்தம குணங்கள்; அல்லால் அல்லாதவற்றுக்கு; அகம் குழைய நெஞ்சுருக; மாட்டேனே மாட்டேன்