PMT 5.2

நின் பெருமையையே நான் பேசுவேன்

689 கண்டாரிகழ்வனவே காதலன்தான்செய்திடினும் *
கொண்டானையல்லால் அறியாக்குலமகள்போல் *
விண்டோய்மதிள்புடைசூழ் விற்றுவக்கோட்டம்மா! நீ *
கொண்டாளாயாகிலும் உன்குரைகழலேகூறுவனே.
689 kaṇṭār ikazhvaṉave * kātalaṉtāṉ cĕytiṭiṉum *
kŏṇṭāṉai allāl * aṟiyāk kulamakal̤ pol **
viṇ toy matil puṭai cūzh * vittuvakkoṭṭu ammā * nī
kŏṇṭāl̤āyākilum * uṉ kuraikazhale kūṟuvaṉe (2)

Ragam

Shankarābharaṇa / சங்கராபரண

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

689.O lord of Vithuvakkodu surrounded by forts that touch the sky! Even if the husband does condemnable acts, a woman of noble birth doesn't know anyone else other than him. I am like the wife . Even if You don't possess me, I will surrender only at your feet decorated with jingling anklets.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
விண் தோய் மதிள் வானளாவிய மதில்களால்; புடை சூழ் சுற்றிலும் சூழப்பட்ட; வித்துவக்கோட்டு வித்துவக்கோட்டு; அம்மா! அம்மானே!; காதலன் காதலனானவன்; கண்டார் பார்ப்பவர் அனைவரும்; இகழ்வனவே இகழத் தக்க செயல்களையே; தான் செய்திடினும் செய்தாலும்; கொண்டானை மணந்த கணவனை; அல்லால் தவிர ஒருவனை; அறியா அறியாதவளான; குலமகள் உயர் குலத்து மகள்; போல் போல்; நீ நீ என்னை; கொண்டாளாயாகிலும் ஏற்காவிட்டாலும்; உன் குரை உன்னுடைய ஒலிக்கும்; கழலே கழலணிந்த திருவடிகளையே; கூறுவனே சரணமடைவேன்