PMT 5.1

தாயின் அருள்தான் சேய்க்கு வேண்டும்

688 தருதுயரம்தடாயேல் உன்சரணல்லால்சரணில்லை *
விரைகுழுவுமலர்ப்பொழில்சூழ் விற்றுவக்கோட் டம்மானே! *
அரிசினத்தாலீன்றதாய் அகற்றிடினும் * மற்றவள்தன்
அருள்நினைந்தேயழும் குழவிஅதுவேபோன்றிருந்தேனே. (2)
688 ## taru tuyaram taṭāyel uṉ * caraṇ allāl caraṇ illai *
virai kuzhuvum malarp pŏzhil cūzh * vittuvakkoṭṭu ammāṉe **
ari ciṉattāl īṉṟa tāy * akaṟṟiṭiṉum * maṟṟu aval̤taṉ
arul̤ niṉainte azhum kuzhavi * atuve poṉṟu irunteṉe (1)

Ragam

Shankarābharaṇa / சங்கராபரண

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

688. O! beloved lord of Vithuvakkodu surrounded with fragrant blooming groves. If you don't redeem my sorrows, I have no other refuge but You. I am like a crying child that seeks the love of the mother who gave birth to it, even if she goes away in anger.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
விரை குழுவும் மணம் மிக்க; மலர்ப்பொழில் சூழ் மலர்ச் சோலை சூழப்பட்ட; வித்துவக்கோட்டு வித்துவக் கோட்டு; அம்மானே ஸ்வாமியே; தரு துயரம் தரப்படும் துன்பத்தை; தடாயேல் களைந்திடாவிட்டால்; உன் சரண் அல்லால் உனது திருவடிகளை அன்றி; சரண் இல்லை எனக்கு வேறு புகலில்லை; ஈன்ற தாய் பெற்ற தாய்; அரி சினத்தால் மிக்க கோபத்தால்; அகற்றிடினும் வெறுத்துத் தள்ளினாலும்; மற்று அவள் தன் பின்பும் அந்த தாயின்; அருள் நினைந்தே பரிவைக் கருதியே; அழும் அழுகின்ற; குழவி அதுவே இளங்குழந்தையையே; போன்று இருந்தேனே ஒத்திருந்தேனே