PAT 5.4.8

என்னிடம் வந்து தங்கி என்னை வாழச்செய்தாய்

470 அனந்தன்பாலும்கருடன்பாலும் ஐதுநொய்தாகவைத்து * என்
மனந்தனுள்ளேவந்துவைகி வாழச்செய்தாய்எம்பிரான்! *
நினைந்துஎன்னுள்ளேநின்றுநெக்குக் கண்கள்அசும்பொழுக *
நினைந்திருந்தேசிரமம்தீர்ந்தேன் நேமிநெடியவனே.
470 aṉantaṉpālum karuṭaṉpālum * aitu nŏytāka vaittu * ĕṉ
maṉantaṉul̤l̤e vantu vaiki * vāzhac cĕytāy ĕmpirāṉ! **
niṉaintu ĕṉṉul̤l̤e niṉṟu nĕkkuk * kaṇkal̤ acumpu ŏzhuka *
niṉaintirunte ciramam tīrnteṉ * nemi nĕṭiyavaṉe (8)

Ragam

Shrī / ஸ்ரீ

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

470. My master! Omnipotent Lord holding the discus(chakra) The loving grace You shower on me is greater than that is shown to Garudā and Adishesha. You have come inside my heart and made me alive. My heart melts, my eyes fill with tears that flow and when I think of You all my sorrows disappear.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நேமி சக்கரத்தையுடைய; நெடியவனே! நெடிய பிரானே!; அனந்தன் பாலும் ஆதிசேஷனிடத்திலும்; கருடன் பாலும் பெரிய திருவடியினிடத்திலும்; ஐது நொய்தாக அன்பை மிகவும் அற்பமாக; வைத்து வைத்து; என் மனந்தனுள்ளே என் மனத்தினுள்ளே; வந்து வைகி வந்து பொருந்தி; வாழச் செய்தாய் என்னை வாழ்வித்தருளினாய்; எம்பிரான்! எம்பிரானே! இப்படிப்பட்ட உனனை; நினைந்து வணங்கி; நின்று துதித்துக்கொண்டு; என் உள்ளே என்னுள்ளே; நெக்கு நெஞ்சு சிதிலமாக; கண்கள் கண்களினின்றும்; அசும்பு ஒழுக நீர் பெருக; நினைந்து இருந்தே நினைத்துக் கொண்டே; சிரமம் தீர்ந்தேன் இளைப்பாறப்பெற்றேன்
nemi You who bear the discus; nĕṭiyavaṉe! oh tall (great) Lord!; vaittu You placed; aitu nŏytāka less love; aṉantaṉ pālum on Adisesha; karuṭaṉ pālum and on Garuda; vantu vaiki instead You came; ĕṉ maṉantaṉul̤l̤e into my heart; vāḻac cĕytāy and blessed me with life; ĕmpirāṉ! oh my Lord!; niṉaintu by bowing and; niṉṟu praising You; nĕkku my heart melts; ĕṉ ul̤l̤e within me; acumpu ŏḻuka and tears flow; kaṇkal̤ from my eyes; niṉaintu irunte thinking only of You; ciramam tīrnteṉ i found solace