PAT 5.3.9

உன்னை இனிப் போகவிடமாட்டேன்

461 அன்றுவயிற்றில்கிடந்திருந்தே அடிமைசெய்யலுற்றிருப்பன் *
இன்றுவந்துஇங்குஉன்னைக்கண்டுகொண்டேன் இனிப்போகவிடுவதுண்டே? *
சென்றங்குவாணனைஆயிரந்தோளும் திருச்சக்கரமதனால் *
தென்றித்திசைதிசைவீழச்செற்றாய்! திருமாலிருஞ்சோலையெந்தாய்!
461 aṉṟu vayiṟṟil kiṭantirunte * aṭi mai cĕyyal uṟṟiruppaṉ *
iṉṟu vantu iṅku uṉṉaik kaṇṭukŏṇṭeṉ * iṉip poka viṭuvatuṇṭe? **
cĕṉṟu aṅku vāṇaṉai āyiram tol̤um * tiruc cakkaram ataṉāl *
tĕṉṟit ticai ticai vīzhac cĕṟṟāy! * tiru māliruñ colai ĕntāy! (9)

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

461. Even when I was in my mother’s womb I was determined to serve You. I was born in this world and today I came here and found you— how could I leave you who fought with Bānasuran and cut off his thousand arms, with your discus (chakra) scattering them in all the directions, O my father, lord of Thirumālirunjolai.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சென்று அங்கு அங்கு சென்று; வாணனை பாணாசுரனை; ஆயிரம் தோளும் ஆயிரம் தோள்களும்; திருச்சக்கரம் அதனால் சக்கராயுதத்தினால்; திசை திசை திக்குகள்தோறும்; தென்றி சிதறி விழும்படி; வீழச் செற்றாய்! வீழ்த்தினாய்; திருமாலிருஞ்சோலை திருமாலிருஞ்சோலை; எந்தாய்! பிரானே!; அன்று வயிற்றில் அந்நாள் கர்ப்பவாசம்; கிடந்து இருந்தே செய்யும் காலம் முதல்; செய்யல் கைங்கரியம் பண்ணுவதில்; உற்றிருப்பன் ஒன்றி இருக்கும் நான்; இன்று வந்து இங்கு இன்று இங்கு வந்து; உன்னை உன்னை; கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்; இனிப்போக இனி உன்னை போக; விடுவதுண்டே? விடுவேனோ?
cĕṉṟu aṅku You went; vīḻac cĕṟṟāy! and brought down; vāṇaṉai Banasura; tiruccakkaram ataṉāl by using your divine discus; āyiram tol̤um and destroyed his thousand shoulders; tĕṉṟi and make them scatter; ticai ticai in all directions; ĕntāy! o Lord of; tirumāliruñcolai Thirumalirunjolai!; kiṭantu irunte from the very day; aṉṟu vayiṟṟil I was in my mother’s womb; uṟṟiruppaṉ I’ve always been united; cĕyyal in serving You; iṉṟu vantu iṅku now, having come here,; kaṇṭu kŏṇṭeṉ and I having seen; uṉṉai You; viṭuvatuṇṭe? how can I ever?; iṉippoka let You go now