PAT 5.3.10

உலகமளந்தான் உறவினராவர்

462 சென்றுலகம்குடைந்தாடும்சுனைத் திருமாலிருஞ்சோலைதன்னுள்
நின்றபிரான் * அடிமேல்அடிமைத்திறம் நேர்படவிண்ணப்பஞ்செய் *
பொன்திகழ்மாடம்பொலிந்துதோன்றும் புதுவைக்கோன்விட்டுசித்தன் *
ஒன்றினோடொன்பதும்பாடவல்லார் உலகமளந்தான்தமரே. (2)
462 ## cĕṉṟu ulakam kuṭaintāṭum cuṉait * tiru māliruñ colai taṉṉul̤
niṉṟa pirāṉ * aṭimel aṭimait tiṟam * nerpaṭa viṇṇappañ cĕy **
pŏṉ tikazh māṭam pŏlintu toṉṟum * putu vaikkoṉ viṭṭucittaṉ *
ŏṉṟiṉoṭu ŏṉpatum pāṭa vallār * ula kam al̤antāṉ tamare (10)

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

462. Vishnuchithan the chief of Puduvai that is filled with golden shining palaces, composed pāsurams about the lord of Thirumālirunjolai where people of the world go and play in the spring water. Those who recite these ten pāsurams will become devotees of the god who measured the world.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பொன் திகழ் தங்கமயமான; மாடம் மாடங்களினால்; பொலிந்து தோன்றும் நிறைந்து விளங்கும்; புதுவைக்கோன் ஸ்ரீ வில்லிபுத்தூர்க்கு தலைவரான; விட்டுசித்தன் பெரியாழ்வார்; சென்று உலகம் உலகத்தாரெல்லாரும் சென்று; குடைந்து ஆடும் நீராட நின்றுள்ள; சுனை சுனைகளால் சூழப்பட்ட; திருமாலிருஞ்சோலை தன்னுள் திருமாலிருஞ்சோலையில்; நின்ற பிரான் இருக்கும் எம்பெருமானுடைய; அடிமேல் திருவடிகளில்; அடிமைத் திறம் கைங்கரிய விஷயமாக; நேர் பட நேராக; விண்ணப்பம் செய் அருளிச்செய்த; ஒன்றினோடொன்பதும் பத்துப்பாசுரங்களையும்; பாடவல்லார் அனுசந்திப்பவர்; உலகம் அளந்தான் உலகம் அளந்தபெருமானுக்கு; தமரே உற்ற அடியார் ஆவரே!
viṭṭucittaṉ Periazhwar; putuvaikkoṉ the leader of Sri Villiputhur that is; pŏlintu toṉṟum filled with; pŏṉ tikaḻ golden; māṭam towers; viṇṇappam cĕy composed; ŏṉṟiṉoṭŏṉpatum these ten hymns; ner paṭa with the intention of; aṭimait tiṟam devoted service; aṭimel at the divine feet of; niṉṟa pirāṉ the Lord who resides; tirumāliruñcolai taṉṉul̤ in Thirumalirunjolai that is; cuṉai surrounded by ponds; cĕṉṟu ulakam where the people of the world go; kuṭaintu āṭum to bathe; pāṭavallār those who meditate upon them; tamare will become the closest devotees; ulakam al̤antāṉ of the Lord who measured the worlds