PAT 5.3.1

திருமாலிருஞ்சோலை எம்பெருமானை மீக்கூறல் தேவகி வயிற்றில் பிறந்தவனே! உன்னைக் கண்டுக்கொண்டேன்

453 துக்கச்சுழலையைச்சூழ்ந்துகிடந்த வலையைஅறப்பறித்து *
புக்கினில்புக்குன்னைக்கண்டுகொண்டேன் இனிப்போகவிடுவதுண்டே? *
மக்களறுவரைக்கல்லிடைமோத இழந்தவள்தன்வயிற்றில் *
சிக்கெனவந்துபிறந்துநின்றாய். திருமாலிருஞ்சோலையெந்தாய். (2)
453 ## tukkac cuzhalaiyaic cūzhntu kiṭanta * valaiyai aṟappaṟittu *
pukkiṉil pukku uṉṉaik kaṇṭu kŏṇṭeṉ * iṉip poka viṭuvatuṇṭe? **
makkal̤ aṟuvaraik kalliṭai mota * izhantaval̤ taṉ vayiṟṟil *
cikkĕṉa vantu piṟantu niṉṟāy! * tiru māliruñ colai ĕntāy (1)

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

453. I pulled myself out of the vicious cycle of births and deaths, followed You wherever You are and I realized You. Will I ever allow You to go hereafter? (I won't allow You to leave my heart) You entered Devaki's womb, after she lost her six children, who were dashed against stone, O father, lord of Thirumālirunjolai ! You were born( as Kannan).

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மக்கள் அறுவரை ஆறு பிள்ளைகளையும்; கல்லிடை மோத கம்சன் கல்லில் மோதியதால்; இழந்தவள் இழந்தவளான; தன் வயிற்றில் தேவகியின் வயிற்றில்; சிக்கென வந்து சடக்கென வந்து; பிறந்து நின்றாய்! அவதரித்தாய்; திருமாலிருஞ்சோலை திருமாலிருஞ்சோலையிலிருக்கும்; எந்தாய்! என் அப்பனே!; துக்க துக்கங்களாகிற; சுழலையை சுழலாற்றை; சூழ்ந்து கிடந்த சுற்றிக் கொண்டிருக்கிற; வலையை சரீரத்தை; அறப் பறித்து அறும்படி போக்கி; புக்கினில் நீ புகுந்தவிடமெல்லாம்; புக்கு நானும் புகுந்து; உன்னைக் உன்னைக்; கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்; இனி இனி; போகவிடுவது உண்டே? போகவிடுவேனோ?
cikkĕṉa vantu You came suddenly; piṟantu niṉṟāy! and incarnated; taṉ vayiṟṟil in the womb of Devaki; iḻantaval̤ who lost; makkal̤ aṟuvarai all six children; kalliṭai mota who were dashed against a stone by Kamsan; ĕntāy! my Lord; tirumāliruñcolai who resides in Thirumaliruncholai; aṟap paṟittu save; valaiyai me from; cūḻntu kiṭanta the swirling; cuḻalaiyai whirlpool of life; tukka with sorrows; pukkiṉil wherever you entered,; pukku I too have entered,; kaṇṭu kŏṇṭeṉ I have seen; uṉṉaik You; iṉi now; pokaviṭuvatu uṇṭe? will I ever let You go?