PAT 5.2.6

தீவினைகளே! நடமின்

448 உற்றவுறுபிணிநோய்காள்! உமக்குஒன்றுசொல்லுகேன்கேண்மின் *
பெற்றங்கள்மேய்க்கும்பிரானார் பேணும்திருக்கோயில்கண்டீர் *
அற்றமுரைக்கின்றேன் இன்னம்ஆழ்வினைகாள்! * உமக்குஇங்குஓர்
பற்றில்லைகண்டீர்நடமின் பண்டன்றுபட்டினம்காப்பே.
448 uṟṟa uṟupiṇi noykāl̤ * umakku ŏṉṟu cŏllukeṉ keṇmiṉ *
pĕṟṟaṅkal̤ meykkum pirāṉār * peṇum tirukkoyil kaṇṭīr **
aṟṟam uraikkiṉṟeṉ * iṉṉam āzhviṉaikāl̤! * umakku iṅku or
paṟṟillai kaṇṭīr naṭamiṉ * paṇṭu aṉṟu paṭṭiṉam kāppe (6)

Ragam

Biyāgadai / பியாகடை

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

448. O diseases that bring suffering to people, I will tell you something, listen. My body is the divine temple of the God who grazed cows. Be careful. There is nothing you can have here. Run away. My body is now the home of God and He protects me.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
உற்ற நெடுநாளாக இருக்கிற கொடிய; உறுபிணி மாறுபட்ட உருவம் கொண்ட; நோய்காள்! வியாதிகளே!; உமக்கு ஒன்று உங்களுக்கு ஒருவார்த்தை; சொல்லுகேன் சொல்லுகிறேன்; கேண்மின் கேளுங்கள்; பெற்றங்கள் பசுக்களை; மேய்க்கும் மேய்க்கும்; பிரானார் கண்ணபிரான்; பேணும் விரும்பி இருக்கும்; திருக் கோயில் திருக் கோயிலை; கண்டீர் பாருங்கள்; அற்றம் அறுதியாகச்; உரைக்கின்றேன் சொல்லுகிறேன்; ஆழ்வினைகாள்! ஆழ்ந்த வினைகளே; இன்னம் மீண்டும் சொல்கிறேன்; உமக்கு இங்கு ஓர் உங்களுக்கு இங்கே ஒரு; பற்றில்லை பற்றும் இல்லை என்பதை; கண்டீர் கண்டு; நடமின் நடையை கட்டுங்கள்; பண்டு அன்று என் ஆத்மாவும் சரீரமும் முன்புபோல் அன்று; பட்டினம் காப்பே கடவுளால் காப்பாற்றப்பட்டுள்ளது
noykāl̤! you diseases!; uṟupiṇi in different forms; uṟṟa that are cruel and that lingers; umakku ŏṉṟu I have a word for you; cŏllukeṉ I say it; keṇmiṉ and you listen; kaṇṭīr look; tiruk koyil at the temple; pirāṉār that Kannan; meykkum who herds; pĕṟṟaṅkal̤ the cows; peṇum loves and dwells in; uraikkiṉṟeṉ I am saying it; aṟṟam firmly; āḻviṉaikāl̤! o deep-rooted karmas!; iṉṉam I say it again; kaṇṭīr see it that; paṟṟillai there is no hold; umakku iṅku or for you here; naṭamiṉ and leave soon; paṇṭu aṉṟu my soul and body are no longer as they once were; paṭṭiṉam kāppe they have been protected by the Lord