PAT 5.1.3

உன் கொயிலில் வாழும் மிடுக்கே பெருமை

435 நன்மைதீமைகளொன்றும்அறியேன்
நாரணா! என்னும்இத்தனையல்லால் *
புன்மையால்உன்னைப்புள்ளுவம்பேசிப்
புகழ்வானன்றுகண்டாய்திருமாலே! *
உன்னுமாறுஉன்னைஒன்றும்அறியேன்
ஓவாதேநமோநாரணா! என்பன் *
வன்மையாவதுஉன்கோயிலில்வாழும்
வைட்டணவனென்னும்வன்மைகண்டாயே.
435 naṉmai tīmaikal̤ ŏṉṟum aṟiyeṉ * nāraṇā ĕṉṉum ittaṉai allāl *
puṉmaiyāl uṉṉaip pul̤l̤uvam pecip * pukazhvāṉ aṉṟu kaṇṭāy tirumāle! **
uṉṉumāṟu uṉṉai ŏṉṟum aṟiyeṉ * ovāte namo nāraṇā! ĕṉpaṉ *
vaṉmai āvatu uṉ koyilil vāzhum * vaiṭṭaṇavaṉ ĕṉṉum vaṉmai kaṇṭāye (3)

Ragam

Dhanyāsi / தன்யாசி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

435. I do not know what is good or what is bad, all I know is to say, “Nāranā. ” Before, I said unworthy things about you but now I only praise you. See, O Thirumāl, I do not even know how to think of you. Always I say, ‘Namo Nārana, Namo Nārana. ” My only strength is that I am a Vaishanavan and live in your temple.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
திருமாலே! எம்பெருமானே!; நாரணா! என்னும் நாரணா! என்னும்; இத்தனை அல்லால் இதைத்தவிர; நன்மை தீமைகள் நன்மை தீமைகள்; ஒன்றும் அறியேன் எது ஒன்றும் அறியேன்; புன்மையால் அற்பத்தனத்தினால்; உன்னை உன்னைக் குறித்து; புள்ளுவம் வஞ்சகமான சொற்களைச்; பேசி சொல்லி; புகழ்வான் புகழுவனும்; அன்று கண்டாய் அல்லன் காண்; உன்னுமாறு இடைவிடாது; உன்னை சிந்திக்கத்தக்க வழிகளில்; ஒன்றும் அறியேன் ஒன்றையும் அறியேன்; ஓவாதே இடைவிடாது; நமோ நாரணா! நமோ நாரணா!; என்பன் என்பதைத் தவிர அடியேனுக்கு; வன்மைஆவது மிடுக்கு ஆவது; உன் கோயிலில் உன்னுடைய கோயிலில்; வாழும் வாழும்; வைட்டணவன் வைஷ்ணவன்; என்னும் என்பதைத் தவிர; வன்மை கண்டாயே வேறு வன்மை கிடையாது
tirumāle! my Lord!; ittaṉai allāl other than; nāraṇā! ĕṉṉum saying "Narayana!"; naṉmai tīmaikal̤ I do not know what is good or bad; ŏṉṟum aṟiyeṉ I know nothing at all; puṉmaiyāl out of lowly ignorance; peci I speak; pul̤l̤uvam deceitful words; uṉṉai about You; aṉṟu kaṇṭāy I am not that kind; pukaḻvāṉ to praise; ŏṉṟum aṟiyeṉ I do not even know the way; uṉṉai to think of You; uṉṉumāṟu constantly; ĕṉpaṉ I, Your humble servant; vaṉmaiāvatu knows no solution other than; ovāte constantly saying; namo nāraṇā! "Namo Narayana!"; vaṉmai kaṇṭāye I have no other strength; ĕṉṉum except for being called a; vaiṭṭaṇavaṉ Vaishnavite; vāḻum and one who lives in; uṉ koyilil Your temple