PAT 4.6.8

தாமரைக்கண்ணன் என்று பெயரிடுக

388 நம்பிபிம்பியென்று நாட்டுமானிடப்பேரிட்டால் *
நம்பும்பிம்புமெல்லாம் நாலுநாளில்அழுங்கிப்போம் *
செம்பெருந்தாமரைக்கண்ணன் பேரிட்டழைத்தக்கால் *
நம்பிகாள். நாரணன் தம்அன்னைநரகம்புகாள்.
388 nampi pimpi ĕṉṟu * nāṭṭu māṉiṭap per iṭṭāl *
nampum pimpum ĕllām * nālu nāl̤il azhuṅkip pom **
cĕmpĕrun tāmaraik kaṇṇaṉ * per iṭṭu azhaittakkāl *
nampikāl̤! nāraṇaṉ * tam aṉṉai narakam pukāl̤ (8)

Ragam

Mohana / மோஹன

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

388. If you give your children the names of village people such as “Nambi, pimbi, ” those “manbu, pimbu” will be forgotten in a few days. If you give them the name of the lovely lotus-eyed lord, O friends, Nāranan will not send the mothers of your children to hell.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நம்பி பிம்பி என்று நம்பி என்றும் பிம்பி என்றும்; நாடு மானிடப்பேர் நாட்டு மனுஷ்யர்களுடைய பெயரை; இட்டால் (உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள்) இட்டால்; நம்பும் பிம்பும் எல்லாம் ‘நம்பி’ ‘பிம்பி’ என்னும் பெயர்களுக்கு அடியான முதன்மையெல்லாம்; நாலு நாளில் சில தினங்களில்; அழுங்கிப் போம் நசித்துப் போகும்; செம்பெரும் சிவந்தும் அகன்றுமிருக்கிற; தாமரை தாமரைமலர்; கண்ணன் கண்களையுடையவன்; பேரிட்டு அழைத்தக்கால் பெயரிட்டு அழைத்தால்; நம்பிகாள்! பெரியோர்களே!; நாரணன்தம் நாராயணன் பெயரைக் கொண்ட; அன்னை பிள்ளையின் தாய்மார்கள்; நரகம் புகாள் நரகத்தை அடைய மாட்டார்கள்
nampikāl̤! oh, great ones!; periṭṭu aḻaittakkāl give the name of; kaṇṇaṉ the Lord with eyes like; tāmarai lotus flower; cĕmpĕrum that are red and wide; aḻuṅkip pom and wither; nālu nāl̤il in a few days; aṉṉai the mother of such a child; nāraṇaṉtam named after Lord Narayana; narakam pukāl̤ will not go to hell