PAT 4.2.8

வண்டுகளும் ஸஹஸ்ரநாமம் சொல்லும் மலை

345 குறுகாதமன்னரைக் கூடுகலக்கி * வெங்கானிடைச்
சிறுகால்நெறியேபோக்குவிக்கும் செல்வன்பொன்மலை *
அறுகால்வரிவண்டுகள் ஆயிரநாமம்சொல்லி *
சிறுகாலைப்பாடும் தென்திருமாலிருஞ்சோலையே.
345 kuṟukāta maṉṉaraik kūṭu kalakki * vĕṅ kāṉiṭaic
ciṟukāl nĕṟiye pokkuvikkum * cĕlvaṉ pŏṉmalai **
aṟukāl vari vaṇṭukal̤ * āyira nāmam cŏlli *
ciṟukālaip pāṭum * tĕṉ tirumāliruñ colaiye (8)

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

345. The golden mountain of the precious god who if enemy kings do not approach him, destroys their countries and makes them walk on small paths in cruel forests is southern Thirumālirunjolai where at dawn thousands of bees with six legs and stripes on their bodies sing his thousand names.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அறுகால் ஆறு கால்களையுடைய; வரி வண்டுகள் அழகிய வண்டுகளானவை; சிறு காலை விடியற்காலையிலே; ஆயிரம் நாமம் எம்பெருமானின் ஆயிரம் நாமங்களை; சொல்லி சொல்லி; பாடும் பாடும் மலை; தென் திருமாலிருஞ்சோலையே தென் திருமாலிருஞ்சோலையே!; குறுகாத மன்னரை திருமலையை அணுகாத அரசர்களுடைய; கூடு கலக்கி வசிக்குமிடத்தை அழித்து; வெங்கானிடை வெம்மை மிக்க காட்டிலே; சிறுகால் நெறியே சிற்றடிப் பாதையிலே; போக்குவிக்கும் அவர்கள் போகும்படி செய்யும்; செல்வன் பொன்மலை கண்ணன் வசிக்கும் அழகிய மலை
tĕṉ tirumāliruñcolaiye it is southern Thirumalirunjolai!; aṟukāl where six legged; vari vaṇṭukal̤ beautiful bees; cŏlli recite; pāṭum and sing; āyiram nāmam the thousand names of the Lord; ciṟu kālai in the early morning; cĕlvaṉ pŏṉmalai it is where Kannan resides who; kūṭu kalakki destroy the place of residence; kuṟukāta maṉṉarai of kings who do not approach Him; pokkuvikkum and force them to go; ciṟukāl nĕṟiye on a narrow path; vĕṅkāṉiṭai in the dense, frightening forest