PAT 4.2.11

கண்ணன் கழலினை காண்பர்

348 மருதப்பொழிலணி மாலிருஞ்சோலைமலைதன்னை *
கருதியுறைகின்ற கார்க்கடல்வண்ணனம்மான்தன்னை *
விரதம்கொண்டேத்தும் வில்லிபுத்தூர்விட்டுசித்தன்சொல் *
கருதியுரைப்பவர் கண்ணன்கழலிணைகாண்பரே . (2)
348 ## marutap pŏzhil aṇi * māliruñ colai malaitaṉṉai *
karuti uṟaikiṉṟa * kārkkaṭal vaṇṇaṉ ammāṉtaṉṉai **
viratam kŏṇṭu ettum * villiputtūr viṭṭucittaṉ cŏl *
karuti uraippavar * kaṇṇaṉ kazhaliṇai kāṇpare (11)

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

348. Vishnuchithan of Villiputhur, always the devotee of the dark ocean-colored god, composed pāsurams about the beautiful Thirumālirunjolai hills surrounded with fields and groves. Those who recite his pāsurams and worship the god will reach Kannan’s ankleted feet.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மருதப்பொழில் மருத நில சோலைகளாலே; அணி அலங்காரமாகவுடைய; மாலிருஞ்சோலை திருமாலிருஞ்சோலை; மலை தன்னை மலையை; கருதி உறைகின்ற விரும்பி வாசம் செய்கின்ற; கார்க் கடல் வண்ணன் கருங்கடல் போன்ற நிறமுடைய; அம்மான் தன்னை கண்ணனை; விரதம் கொண்டு விரதமாகக்கொண்டு; ஏத்தும் வில்லிபுத்தூர் வாழ்த்தும் வில்லிபுத்தூர்; விட்டுசித்தன் பெரியாழ்வார்; சொல் அருளிச்செய்த பாசுரங்களை; கருதி உரைப்பவர் விரும்பி அனுசந்திப்பவர்; கண்ணன் கழலிணை கண்ணன் திருவடிகளை; காண்பரே அடைவார்கள்
karuti uraippavar those who recite; cŏl these pasurams composed by; viṭṭucittaṉ Periazhwar; ettum villiputtūr of villiputhur; viratam kŏṇṭu with great devotion that describe; māliruñcolai Thirumalirunjolai; malai taṉṉai mountain; aṇi which is decorated with; marutappŏḻil groves of the Maruda tree; ammāṉ taṉṉai and where Kannan; kārk kaṭal vaṇṇaṉ the dark ocean colored One; karuti uṟaikiṉṟa likes to reside; kāṇpare will reach; kaṇṇaṉ kaḻaliṇai the holy feet of Kannan