PAT 4.2.1

திருமாலிருஞ்சோலை மலைச் சிறப்பு சிலம்பாறு பாயும் திருமாலிருஞ்சோலை

338 அலம்பாவெருட்டாக்கொன்று திரியுமரக்கரை *
குலம்பாழ்படுத்துக் குலவிளக்காய்நின்றகோன்மலை *
சிலம்பார்க்கவந்து தெய்வமகளிர்களாடும்சீர் *
சிலம்பாறுபாயும் தென்திருமாலிருஞ்சோலையே. (2)
338 ## alampā vĕruṭṭāk * kŏṉṟu tiriyum arakkarai *
kulam pāzh paṭuttuk * kulavil̤akkāy niṉṟa koṉ malai **
cilampu ārkka vantu * tĕyva- makal̤irkal̤ āṭum cīr *
cilampāṟu pāyum * tĕṉ tirumāliruñ colaiye (1)

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

338. The mountain of him, the king, the light of the family of the cowherds who destroyed the clan of the Rakshasās when they wandered about and scared and afflicted people, is the southern Thirumālirunjolai where divine Apsarases come and wander as their anklets jingle and where the river Silambāru flows.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தெய்வ மகளிர்கள் தேவதைகளான மகளிர்கள்; சிலம்பு ஆர்க்க பாதச்சிலம்புகள் ஒலிக்கும்படி; வந்து பூலோகத்தில் வந்து; ஆடும் சீர் நீராடும்படியான பெருமையையுடைய; சிலம்பாறு பாயும் நூபுர கங்கையானது பாயும்; தென் திருமாலிருஞ்சோலையே தென் திருமாலிருஞ்சோலை; அலம்பா பிராணிகளை அலையச் செய்தும்; வெருட்டா பயப்படுத்தியும்; கொன்று திரியும் கொன்று திரிந்து கொண்டிருந்த; அரக்கரை ராக்ஷஸர்களை; குலம் பாழ் படுத்து குடும்பத்தோடு அழித்து
tĕyva makal̤irkal̤ divine Apsarases come; vantu and wander as; cilampu ārkka their anklets jingle; āṭum cīr and take bath in; cilampāṟu pāyum noopura gangai (silambaru) that flows in; tĕṉ tirumāliruñcolaiye southern Thirumālirunjolai; kulam pāḻ paṭuttu that destroyed; arakkarai the rakshasas; kŏṉṟu tiriyum who wandered and killed; vĕruṭṭā and scared; alampā innocent creatures