PAT 3.6.9

குழலிசை கேட்ட மான்களின் நிலை

283 திரண்டெழுதழைமழைமுகில்வண்ணன்
செங்கமலமலர்சூழ்வண்டினம்போலே *
சுருண்டிருண்டகுழல்தாழ்ந்தமுகத்தான்
ஊதுகின்றகுழலோசைவழியே *
மருண்டுமான்கணங்கள்மேய்கைமறந்து
மேய்ந்தபுல்லும்கடைவாய்வழிசோர *
இரண்டுபாடும்துலுங்காப்புடைபெயரா
எழுதுசித்திரங்கள்போலநின்றனவே.
283 tiraṇṭu ĕzhu tazhai mazhaimukil vaṇṇaṉ * cĕṅkamala malar cūzh vaṇṭiṉam pole *
curuṇṭu iruṇṭa kuzhal tāzhnta mukattāṉ * ūtukiṉṟa kuzhal-ocai vazhiye **
maruṇṭu māṉ-kaṇaṅkal̤ meykai maṟantu * meynta pullum kaṭaivāy vazhi cora *
iraṇṭu pāṭum tuluṅkāp puṭaipĕyarā * ĕzhutu cittiraṅkal̤ pola niṉṟaṉave (9)

Ragam

Sāveri / ஸாவேரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

283. His dark color is like mass of clouds, his face is beautiful like a red lotus, and his dark curly hair falls on His face like the bees that swarm the lotus When he plays his flute, the herd of deer, fascinated with his music, forgets to graze and chew and the grass that they have eaten hangs from their mouths Not swaying from side to side, they stand motionless as if they were painted pictures.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
திரண்டு எழு திரண்டு வரும்; தழை தாழ்ந்த; மழை முகில் வண்ணன் மேகம் போன்ற கண்ணன்; செங்கமல சிவந்த தாமரை; மலர் சூழ் மலர்களைச் சூழ்ந்திருக்கும்; வண்டினம் போலே வண்டுகள் போல்; சுருண்டு இருண்ட சுருண்டு கருத்த; குழல் தாழ்ந்த முகத்தான் தலைமுடி கவிந்த முகத்தோடு; ஊதுகின்ற கண்ணன் ஊதும்; குழல் ஓசை வழியே குழலிசையைக் கேட்டு; மருண்டு மான் கணங்கள் மயங்கிய மான் கூட்டம்; மேய்கை மறந்து மேய்ச்சலை மறந்து; மேய்ந்த புல்லும் மேய்ந்த புல்லலையும் மறந்து; கடைவாய் வழி சோர கடைவாய் வழியாக வெளியே விழ; இரண்டு பாடும் முன்னும் பின்னும்; துலங்கா அசையாமலும்; புடைபெயரா பக்கங்களில் அடி எடுத்து வைக்காமலும்; எழுது சித்திரங்கள் வரைந்த ஓவியங்கள் போல; நின்றனவே நின்றனவே
maḻai mukil vaṇṇaṉ Kannan is like dark clouds; tiraṇṭu ĕḻu that forms; taḻai and is low hanging; vaṇṭiṉam pole like bees; malar cūḻ that surrounds; cĕṅkamala the red lotus flowers; maruṇṭu māṉ kaṇaṅkal̤ the enchanted deers; kuḻal ocai vaḻiye after listening to the music; ūtukiṉṟa that comes from the flute of Kannan; curuṇṭu iruṇṭa who has curly and dark; kuḻal tāḻnta mukattāṉ hair; meykai maṟantu forgets the pasture; meynta pullum forgets the soft green grass; kaṭaivāy vaḻi cora and the grass falls from their mouth; tulaṅkā not moving; iraṇṭu pāṭum forward or backward; puṭaipĕyarā and not moving sideways; niṉṟaṉave they stood their; ĕḻutu cittiraṅkal̤ like a painting