PAT 3.6.4

குழலிசையில் மயங்கிய அரம்பையர்

278 தேனுகன்பிலம்பன்காளியனென்னும்
தீப்பப்பூடுகள்அடங்கஉழக்கி *
கானகம்படிஉலாவியுலாவிக்
கருஞ்சிறுக்கன்குழலூதினபோது *
மேனகையொடுதிலோத்தமைஅரம்பை
உருப்பசியரவர்வெள்கிமயங்கி *
வானகம்படியில்வாய்திறப்பின்றி
ஆடல்பாடலவைமாறினர்தாமே.
278 teṉukaṉ pilampaṉ kāl̤iyaṉ ĕṉṉum * tīppap pūṭukal̤ aṭaṅka uzhakki *
kāṉakam paṭi ulāvi ulāvik * karuñciṟukkaṉ kuzhal ūtiṉa potu **
meṉakaiyŏṭu tilottamai arampai * uruppaciyar avar vĕl̤ki mayaṅki *
vāṉakam paṭiyil vāy tiṟappu iṉṟi * āṭal pāṭal ivai māṟiṉar tāme (4)

Ragam

Sāveri / ஸாவேரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

278. When the dark colored, little Kannan who fought, conquered and destroyed the evil Asuras Thenuhan, Pilamban and Kaliyan, plays his flute wandering about in the forests, Menaga, Thilothama, Ramba, Urvashi and other heavenly damsels, fascinated as they hear his music, are speechless and come down from the sky, forgetting to dance and sing.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தேனுகன் பிலம்பன் தேனுகாசுரன் பிலம்பாசுரன்; காளியன் என்னும் காளியன் என்ற நாகாசுரன் ஆகிய; தீப்பப் பூடுகள் கொடிய பூண்டுகளை; அடங்க உழக்கி அடியோடு அழித்து; கானகம் படி காட்டில் இயற்கையாக; உலாவி உலாவி சுதந்திரமாக திரிந்துகொண்டு; கருஞ்சிறுக்கன் கரு நிற சிறுபிள்ளை; குழல் ஊதின போது புல்லாங்குழல் வாசித்த போது; மேனகையொடு மேனகையுடன்; திலோத்தமை அரம்பை திலோத்தமை ரம்பை; உருப்பசியர் அவர் ஊர்வசி ஆகியோர்; வெள்கி மயங்கி நாணத்துடன் இசையைக்கேட்டு மயங்கி; வானகம் படியில் தேவலோகத்திலும் பூலோகத்திலும்; வாய் திறப்பு இன்றி வாயைத் திறக்காமல்; ஆடல் பாடல் இவை ஆடல் பாடல் இவைகளை; மாறினர் தாமே தாங்களாகவே நிறுத்திக்கொண்டனர்
karuñciṟukkaṉ the dark complexioned Child; ulāvi ulāvi wander independently and; kāṉakam paṭi naturally in the forest; aṭaṅka uḻakki who completely destroyed; tīppap pūṭukal̤ the evil asuras like; teṉukaṉ pilampaṉ thenuhan, pilamban; kāl̤iyaṉ ĕṉṉum and naragasuran called kaliyan; kuḻal ūtiṉa potu when He played the flute; meṉakaiyŏṭu along with menaka; tilottamai arampai thilothamma, rambha and; uruppaciyar avar urvasi; vĕl̤ki mayaṅki got fascinated by the music; vāṉakam paṭiyil and comes down from the sky; vāy tiṟappu iṉṟi and remain speechless; māṟiṉar tāme and stopped; āṭal pāṭal ivai dancing and singing