PAT 3.6.2

கோவிந்தன் குழலூதியதன் விளைவு

276 இடவணரைஇடத்தோளொடுசாய்த்து
இருகைகூடப்புருவம்நெரிந்தேற *
குடவயிறுபடவாய்கடைகூடக்
கோவிந்தன்குழல்கொடுஊதினபோது *
மடமயில்களொடுமான்பிணைபோலே
மங்கைமார்கள்மலர்க்கூந்தலவிழ *
உடைநெகிழஓர்கையால்துகில்பற்றி
ஒல்கியோடரிக்கணோடநின்றனரே.
276 iṭa aṇarai iṭat tol̤ŏṭu cāyttu * irukai kūṭap puruvam nĕrintu eṟa *
kuṭavayiṟu paṭa vāy kaṭaikūṭak * kovintaṉ kuzhalkŏṭu ūtiṉa potu **
maṭa mayilkal̤ŏṭu māṉpiṇai pole * maṅkaimārkal̤ malark kūntal avizha *
uṭai nĕkizha orkaiyāl tukil paṟṟi * ŏlki oṭu arikkaṇ ŏṭa niṉṟaṉare (2)

Ragam

Sāveri / ஸாவேரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

276. When Govindan takes his flute in his hands, bends his eyebrows, blows the air from his stomach and plays, young doe-eyed girls as beautiful as peacocks listen. Their hair decorated with flowers becomes undone, their dresses become loose and holding their slipping garments they stand looking at him through the corners of their eyes.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இட அணரை இடது மோவாய்க் கட்டையை; இடத் தோளொடு சாய்த்து இடது தோள் பக்கமாகச் சாய்ந்து; இருகை இரண்டு கைகளும்; கூட புல்லாங்குழலோடே சேர்ந்திடவும்; புருவம் நெரிந்து ஏற புருவமானது நெளிந்து மேலே ஏறவும்; குட வயிறு பட வயிறு குடம் போல தோன்றவும்; வாய் கடை கூட உதடுகள் புல்லாங்குழலோடு சேர்ந்து; கோவிந்தன் கண்ணன்; குழல் கொடு ஊதின போது புல்லாங்குழல் வாசித்த போது; மட மயில்களொடு அழகிய மயில்களையும்; மான்பிணை போலே பேடை மான்களையும் போன்றுள்ள; மங்கைமார்கள் அழகிய பெண்கள்; மலர் மறந்த நிலையில் பூச்சூடிய; கூந்தல் அவிழ கூந்தல் அவிழ; உடை நெகிழ அணிந்திருக்கும் ஆடை நெகிழ; ஓர் கையால் ஒரு கையால்; துகில் பற்றி ஆடையைப் பற்றிக்கொண்டு; ஒல்கி ஓடு நாணி ஒடுங்கி; அரிக்கண் ஓட கண்களில் செவ்வரி கருவரி படர; நின்றனரே திகைத்து நின்றனர்
iṭa aṇarai by tilting the left waist; iṭat tol̤ŏṭu cāyttu and leaning towards the left shoulder; irukai and with both hands come together; kūṭa holding the flute; puruvam nĕrintu eṟa the eyebrows arching and rising upward; kuṭa vayiṟu paṭa stomach resemble a pot; kovintaṉ Kannan's; vāy kaṭai kūṭa lips meet the flute; kuḻal kŏṭu ūtiṉa potu when He plays the flute; maṅkaimārkal̤ the beautiful women; maṭa mayilkal̤ŏṭu resembling peacocks; māṉpiṇai pole and deers; malar in a state of forgetfulness, with flowers in their hair; kūntal aviḻa their locks of hair loosen; uṭai nĕkiḻa their garments slipping; or kaiyāl with one hand; tukil paṟṟi they hold onto their clothes; ŏlki oṭu feeling shy; arikkaṇ oṭa with their eyes filled with longing and desire; niṉṟaṉare they stood frozen in awe