PAT 3.6.11

சாதுக்களின் கோஷ்டியில் சேர்வர்

285 குழலிருண்டுசுருண்டேறியகுஞ்சிக்
கோவிந்தனுடையகோமளவாயில் *
குழல்முழைஞ்சுகளினூடுகுமிழ்த்துக்
கொழித்திழிந்தஅமுதப்புனல்தன்னை *
குழல்முழவம்விளம்பும்புதுவைக்கோன்
விட்டுசித்தன்விரித்ததமிழ்வல்லார் *
குழலைவென்றகுளிர்வாயினராகிச்
சாதுகோட்டியுள்கொள்ளப்படுவாரே. (2)
285 ## kuzhal iruṇṭu curuṇṭu eṟiya kuñcik * kovintaṉuṭaiya komal̤a vāyil *
kuzhal muzhaiñcukal̤iṉ ūṭu kumizhttuk * kŏzhittu izhinta amutap puṉaltaṉṉai **
kuzhal muzhavam vil̤ampum putuvaikkoṉ * viṭṭucittaṉ viritta tamizh vallār *
kuzhalai vĕṉṟa kul̤ir vāyiṉarākic * cātukoṭṭiyul̤ kŏl̤l̤ap paṭuvāre (11)

Ragam

Sāveri / ஸாவேரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

285. Vishnuchithan the chief of Puduvai composed pāsurams about how music flowed like a flood of nectar from the holes of the bamboo flute in the beautiful hands of curly-haired Govindan with a tuft on his head. If those skilled in Tamil, recite these pāsurams of Vishnuchithan they will be among the devotees of the god.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
குழல் இருண்டு சுருண்டு கருத்த கேசம் சுருண்டு; ஏறிய குஞ்சி நெற்றியின் மேலேரிய தலைமுடி; கோவிந்தனுடைய கோவிந்தனுடைய; கோமள வாயில் அழகிய வாயில் வைத்து; குழல் முழைஞ்சுகளின் குழல் துளைகளின்; ஊடு குமிழ்த்துக் வழியாகப் குமிழ்ந்து; கொழித்து இழிந்த அலையாக வழிந்து வரும்; அமுதப் புனல் தன்னை அமிர்தம் போன்ற ஜலத்தை; குழல் முழவம் விளம்பும் இசை ஓசையாக; புதுவைக்கோன் ஸ்ரீவில்லிபுத்தூருக்குத் தலைவரான; விட்டுசித்தன் விரித்த பெரியாழ்வார் இயற்றிய; தமிழ் தமிழ்ப் பாசுரங்களை; வல்லார் அனுசந்திப்பவர்கள்; குழலை வென்ற குழலோசையையும் வெல்லும்; குளிர் வாயினராகி குளுமையான பேச்சுடையவர்களாக; சாதுகோட்டியுள் சான்றோர் கோஷ்டியில்; கொள்ளப் படுவாரே ஏற்றுக் கொள்ளப்படுவார்கள்
kovintaṉuṭaiya Govindan; kuḻal iruṇṭu curuṇṭu has curly-hair; eṟiya kuñci that flows on His forehead; ūṭu kumiḻttuk through; kuḻal muḻaiñcukal̤iṉ the holes of the flute; komal̤a vāyil that Kannan plays with His beautiful mouth; kuḻal muḻavam vil̤ampum the divine music; kŏḻittu iḻinta flows; amutap puṉal taṉṉai like nectar; vallār those who recite; tamiḻ these tamil pasurams composed by; viṭṭucittaṉ viritta Periazhwar; putuvaikkoṉ the chief of Srivilliputhur; kul̤ir vāyiṉarāki will develop sweet speech; kuḻalai vĕṉṟa winning the flute music; kŏl̤l̤ap paṭuvāre and will be accepted; cātukoṭṭiyul̤ among the devotees