PAT 3.5.4

தேவர் பெருமான் கொண்டு நின்ற மலை

267 கடுவாய்ச்சினவெங்கண்களிற்றினுக்குக்
கவளமெடுத்துக்கொடுப்பானவன்போல் *
அடிவாயுறக்கையிட்டுஎழப்பறித்திட்டு
அமரர்பெருமான்கொண்டுநின்றமலை *
கடல்வாய்ச்சென்றுமேகம்கவிழ்ந்திறங்கிக்
கதுவாய்ப்படநீர்முகந்தேறி * எங்கும்
குடவாய்ப்படநின்றுமழைபொழியும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே.
267 kaṭu vāyc ciṉa vĕṅkaṇ kal̤iṟṟiṉukkuk * kaval̤am ĕṭuttuk kŏṭuppāṉ avaṉ pol *
aṭivāy uṟak kaiyiṭṭu ĕzhap paṟittiṭṭu * amararpĕrumāṉ kŏṇṭu niṉṟa malai **
kaṭalvāyc cĕṉṟu mekam kavizhntu iṟaṅkik * katuvāyp paṭa nīrmukantu eṟi * ĕṅkum
kuṭavāyp paṭa niṉṟu mazhai pŏzhiyum * kovarttaṉam ĕṉṉum kŏṟṟak kuṭaiye (4)

Ragam

Pantuvaraḷi / பந்துவராளி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

267. Like a mahout giving a ball of rice, to a big-mouthed angry-eyed elephant, Kannan the God of Gods, dug deep into the earth and lifted the Govardhanā mountain (Madhura), where the clouds descend to the ocean, scooping up the water, rise to the sky in the east, gather and pour down rain as if from a pot.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கடு வாய் பயங்கரமான வாயையும்; சின வெங்கண் சினமிக்கக் கண்களையும் உடைய; களிற்றினுக்கு யானைக்கு; கவளம் எடுத்து சோற்றுக் கவளத்தை எடுத்து; கொடுப்பான் அவன் போல் கொடுக்கும் பாகனைப்போல; அடிவாய் உற மலையின் அடி வேரிலே ஊன்றும்படியாக; கையிட்டு எழ கையை கீழே செலுத்தி மலையைத் தூக்கி; பறித்திட்டு எடுத்து; அமரர் பெருமான் கொண்டு நின்ற கண்ணபிரான்; கடல் வாய்ச் சென்று கடலில் சென்று; மேகம் கவிழ்ந்து இறங்கி மேகம் கவிழ்ந்து இறங்கி; கதுவாய்ப் பட அங்குள்ள நீரை தரை தெரியுமளவு; நீர் முகந்து ஏறி எங்கும் எடுத்துக்கொண்டு; குடவாய்ப் பட குடத்திலிருந்து கொட்டுவது போல; நின்று மழை பொழியும் மழையாகப் பொழியும்; கோவர்த்தனம் என்னும் கோவர்த்தனம் என்னும்; கொற்றக் குடையே வெற்றிக் குடையே
amarar pĕrumāṉ Lord Kannan; kŏṭuppāṉ avaṉ pol like a mahout; kaval̤am ĕṭuttu giving a ball of rice; kal̤iṟṟiṉukku an elephant with; kaṭu vāy big mouth; ciṉa vĕṅkaṇ and angry eyes; aṭivāy uṟa goes to the root of the Govardhana mountain; kaiyiṭṭu ĕḻa and with His hands He lifts; paṟittiṭṭu and holds it; mekam kaviḻntu iṟaṅki the clouds descend to; kaṭal vāyc cĕṉṟu the sea; nīr mukantu eṟi ĕṅkum and picks up; katuvāyp paṭa the water; niṉṟu maḻai pŏḻiyum and let it fall as rain; kuṭavāyp paṭa like water pouring from a pot; kovarttaṉam ĕṉṉum Govardhanam mountain; kŏṟṟak kuṭaiye is indeed a victorious umbrella