PAT 3.5.11

வைகுந்தம் நண்ணுவர்

274 அரவில்பள்ளிகொண்டுஅரவம்துரந்திட்டு
அரவப்பகையூர்தியவனுடைய *
குரவிற்கொடிமுல்லைகள்நின்றுறங்கும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடைமேல் *
திருவிற்பொலிமறைவாணர்புத்தூர்
திகழ்பட்டர்பிரான்சொன்னமாலைபத்தும் *
பரவுமனநன்குடைப்பத்தருள்ளார்
பரமானவைகுந்தம்நண்ணுவரே. (2)
274 ## aravil pal̤l̤ikŏṇṭu aravam turantiṭṭu * aravap-pakai ūrti avaṉuṭaiya *
kuravil kŏṭi mullaikal̤ niṉṟu uṟaṅkum * kovarttaṉam ĕṉṉum kŏṟṟak kuṭaimel **
tiruvil pŏli maṟaivāṇar puttūr tikazh * paṭṭarpirāṉ cŏṉṉa mālai pattum *
paravu maṉam naṉku uṭaip pattar ul̤l̤ār * paramāṉa vaikuntam naṇṇuvare (11)

Ragam

Pantuvaraḷi / பந்துவராளி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

274. The famous Pattarpiran Vishnuchithan where the Vediyars recite the divine Vedās composed these ten pāsurams on Govardhanā mountain (Madhura) where jasmine flowers bloom on the branches of kuravam trees. He describes how the hill is carried as an umbrella by the god who rests on Adishesha and rides on the Garudā, the enemy of snake. If devotees recite those pāsurams in their hearts and worship him, they will reach divine Vaikuntam.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அரவில்பள்ளிகொண்டு பாம்பணையில் பள்ளிகொண்டு; அரவம் ஆய்ப்பாடியில் வந்து; துரந்திட்டு காளீயனை துரத்திவிட்டு; அரவப்பகை பாம்பின் பகைவனான கருடனை; ஊர்தி தனது வாகனமாக உடைய பிரான்; குரவிற் கொடி குரவ மரத்தில் படர்ந்துள்ள; முல்லைகள் முல்லைக்கொடி; நின்று உறங்கும் நிலை பெற்றிருக்கும்; கோவர்த்தனம் என்னும் கோவர்த்தன மலை என்னும்; கொற்றக் குடை மேல் வெற்றிக் குடையைப் பற்றி; திருவிற்பொலி லக்ஷ்மிகடாக்ஷம் பெற்ற; மறைவாணர் வேத விற்பன்னர்கள்; புத்தூர்த் திகழ் வாழ்கின்ற ஸ்ரீவில்லிபுத்தூரில் வாழும்; பட்டர் பிரான் சொன்ன பெரியாழ்வார் அருளிச்செய்த; மாலை பத்தும் பத்துப் பாசுரங்களையும்; பரவு மனம் நன்கு உடை பரந்த மனம் உடைய; பத்தர் உள்ளார் பக்தர்களாக இருப்பவர்; பரமான வைகுந்தம் ஸ்ரீவைகுண்டத்தை; நண்ணுவரே அடைவார்கள்
aravilpal̤l̤ikŏṇṭu He rests on Adishesha and; aravam came to Aiyarpadi; turantiṭṭu and made kaliyan leave; ūrti as a vehicle, He has; aravappakai Garudā, the enemy of snake; kŏṟṟak kuṭai mel He lifted a victorious umbrella; kovarttaṉam ĕṉṉum called Govardhana mountain; niṉṟu uṟaṅkum where; mullaikal̤ jasmine flowers bloom; kuraviṟ kŏṭi on the branches of kuravam tree; paravu maṉam naṉku uṭai those to recite; pattar ul̤l̤ār with devotion; mālai pattum these ten pasurams; paṭṭar pirāṉ cŏṉṉa composed by Periyazhwar of; puttūrt tikaḻ SriVilliputhur, where; maṟaivāṇar Vediyars lives; tiruviṟpŏli with the blessings of Mahalakshmi; naṇṇuvare will reach; paramāṉa vaikuntam Sri Vaikuntam