PAT 3.5.10

கோவர்த்தனத்தை எடுத்தது இந்திர ஜாலமோ!

273 கொடியேறுசெந்தாமரைக்கைவிரல்கள்
கோலமும்அழிந்திலவாடிற்றில *
வடிவேறுதிருவுகிர்நொந்துமில
மணிவண்ணன்மலையுமோர்சம்பிரதம் *
முடியேறியமாமுகிற்பல்கணங்கள்
முன்னெற்றிநரைத்தனபோல * எங்கும்
குடியேறியிருந்துமழைபொழியும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே.
273 kŏṭi eṟu cĕn tāmaraik kaiviralkal̤ * kolamum azhintila vāṭiṟṟu ila *
vaṭivu eṟu tiruvukir nŏntum ila * maṇivaṇṇaṉ malaiyum or campiratam **
muṭi eṟiya mā mukil pal kaṇaṅkal̤ * muṉ nĕṟṟi naraittaṉa pola * ĕṅkum
kuṭi eṟi iruntu mazhai pŏzhiyum * kovarttaṉam ĕṉṉum kŏṟṟak kuṭaiye (10)

Ragam

Pantuvaraḷi / பந்துவராளி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

273. The fingers of his lotus hands that have creeper-like thin prints did not loose their beauty and his strong beautiful finger-nails did not hurt when the beautiful blue-colored one carried Govardhanā mountain (Madhura). He carried the mountain as if it were something he did every day. On the umbrella-like Govardhanā mountain, a group of large clouds rest on the top of the hills making the mountain look as if it has grey hair as they pour down rain everywhere.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கொடி ஏறு கொடி போன்ற ரேகைகளையுடைய; செந்தாமரை சிவந்த தாமரைப்போன்ற; கை விரல்கள் கை விரல்களின்; கோலமும் அழகு மலையைத்தாங்கி நின்றிருந்தும்; அழிந்தில அழியவுமில்லை; வாடிற்று இல வாட்டமுறவுமில்லை; வடிவு ஏறு திரு உகிர் அழகிய நகங்களிலும்; நொந்தும் இல வலி ஏற்படவில்லை; மணி வண்ணன் மணி வண்ணன் கண்ணபிரான்; மலையும் எடுத்த மலையும்; ஓர் சம்பிரதம் ஒரு கண்கட்டு வித்தைதான்; முடி ஏறிய மா முகில் மலைச் சிகரத்திலுள்ள பெரிய மேக; பல் கணங்கள் கூட்டங்களின்; முன் நெற்றி நரைத்தன போல முன் நெற்றி நரைத்தது போல; எங்கும் குடி ஏறி இருந்து எல்லா இடங்களிலும் புகுந்து; மழை பொழியும் மழை பொழியும்; கோவர்த்தனம் என்னும் கோவர்த்தனம் என்னும்; கொற்றக் குடையே வெற்றிக் குடையே
kolamum when He lifted the mountain; kŏṭi eṟu the creeper-like finger prints; kai viralkal̤ on the fingers; cĕntāmarai of His lotus hands; aḻintila was not lost; vāṭiṟṟu ila nor had any trouble; vaṭivu eṟu tiru ukir His strong beautiful finger-nails; nŏntum ila did not hurt as well; maṇi vaṇṇaṉ Kannan, the beautiful blue-colored One; malaiyum when He lifted the mountain; or campiratam it felt like a magic trick; pal kaṇaṅkal̤ the grey clouds; muṭi eṟiya mā mukil at the peaks of the mountain; muṉ nĕṟṟi naraittaṉa pola looked its greyed hair; maḻai pŏḻiyum as the rain pour down; ĕṅkum kuṭi eṟi iruntu everywhere; kovarttaṉam ĕṉṉum Govardhanam mountain; kŏṟṟak kuṭaiye is indeed a victorious umbrella