PAT 3.4.8

இந்திரன்போல் வரும் ஆயப்பிள்ளை

261 சிந்துரப்பொடிக்கொண்டுசென்னியப்பித்
திருநாமமிட்டங்கோரிலையந்தன்னால் *
அந்தரமின்றித்தன்னெறிபங்கியை
அழகியநேத்திரத்தாலணிந்து *
இந்திரன்போல்வருமாயப்பிள்ளை
எதிர்நின்றங்கினவளைஇழவேலென்ன *
சந்தியில்நின்றுகண்டீர் நங்கைதன்
துகிலொடுசரிவளைகழல்கின்றதே.
261 cinturap-pŏṭi kŏṇṭu cĕṉṉi appit * tirunāmam iṭṭu aṅku or ilaiyantaṉṉāl *
antaram iṉṟit taṉ nĕṟi paṅkiyai * azhakiya nettirattāl aṇintu **
intiraṉ pol varum āyappil̤l̤ai * ĕtirniṉṟu aṅku iṉaval̤ai izhavel ĕṉṉa *
cantiyil niṉṟu kaṇṭīr naṅkai taṉ * tukilŏṭu carival̤ai kazhalkiṉṟate (8)

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

261. A red thilak ( pottu ) made of red powder and a divine nāmam adorn his forehead. Wearing beautiful peacock feathers in his hair, the cowherd child comes like Indra, the king of the gods. I told my daughter, “If you go before him, you will lose your bangles. ” My beautiful girl stands before him in the middle of the street, and see, her bangles and clothes are becoming loose.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சிந்துரப் பொடிக்கொண்டு சிந்துரப் பொடியை; சென்னி அப்பி சிரசில் அப்பிக்கொண்டு; அங்கு ஓர் இலையந் தன்னால் ஒரு இலையைக்கொண்டு; திரு நாமம் இட்டு நாமம் இட்டு கொண்டு; அந்தரம் இன்றி இடைவெளியின்றி; தன் நெறி பங்கியை தன் தலைமுடியை; அழகிய நேத்திரத்தால் அழகிய பீலிக்கண்களால்; அணிந்து அலங்கரித்துக்கொண்டு; இந்திரன் போல் வரும் இந்திரன் போல் வரும்; ஆயப் பிள்ளை எதிர் நின்ற கண்ணபிரானின் எதிரே நின்று; அங்கு இனவளை அங்கே திரளான கை வளையல்களை; இழவேல் என்ன எதையும் இழந்து விடாதே என்று சொல்லியும்; சந்தியில் நின்று தெருவில் நின்று; கண்டீர் நங்கை தன் அவனைப்பார்த்த மாத்திரத்தில் என் பெண்; துகிலொடு சரிவளை ஆடையுடன் கைவளையும்; கழல்கின்றதே கழல்கின்றனவே! கழல்வது தெரியாமல் நின்றாள்
cĕṉṉi appi He adorns a red thilak; cinturap pŏṭikkŏṇṭu made of red powder; tiru nāmam iṭṭu and a divine nāmam; aṅku or ilaiyan taṉṉāl using a leaf; antaram iṉṟi continuously; taṉ nĕṟi paṅkiyai His hair; aṇintu was decorated; aḻakiya nettirattāl with peacock feathers; āyap pil̤l̤ai ĕtir niṉṟa standing in front of Kannan, who; intiraṉ pol varum came like Indra; iḻavel ĕṉṉa inspite of telling that she would loose; aṅku iṉaval̤ai her bangles; cantiyil niṉṟu my daughter stood on the street; kaṇṭīr naṅkai taṉ as soon as she saw Him she felt; tukilŏṭu carival̤ai her bangles and clothes; kaḻalkiṉṟate were becoming loose