PAT 3.1.7

ஆயர் கன்னியர் தொழும் சோதி

229 மருட்டார்மென்குழல்கொண்டுபொழில்புக்கு
வாய்வைத்துஅவ்வாயர்தம்பாடி *
சுருட்டார்மென்குழல்கன்னியர்வந்துஉன்னைச்
சுற்றும்தொழநின்றசோதி! *
பொருட்டாயமிலேன்எம்பெருமான்!
உன்னைப்பெற்றகுற்றமல்லால் * மற்றிங்கு
அரட்டா! உன்னைஅறிந்துகொண்டேன்
உனக்குஅஞ்சுவன் அம்மம்தரவே.
229 maruṭṭār mĕṉkuzhal kŏṇṭu pŏzhil pukku * vāyvaittu av āyartam pāṭi *
curuṭṭār mĕṉkuzhal kaṉṉiyar vantu uṉṉaic * cuṟṟum tŏzha niṉṟa coti **
pŏrul̤- tāyam ileṉ ĕmpĕrumāṉ * uṉṉaip pĕṟṟa kuṟṟam allāl * maṟṟu iṅku
araṭṭā uṉṉai aṟintu kŏṇṭeṉ * uṉakku añcuvaṉ ammam tarave (7)

Ragam

Ārabi / ஆரபி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

229. You are the light! You go into the grove and play soft music enthralling everyone. The cowherd girls with soft curly hair surround you to listen to your music and worship you. O dear child, my only fault is that I have raised you. You are naughty and the cowherd women are always complaining about you. But I know who you are and I’m afraid to give you food.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மருட்டார் மதி மயங்கச்செய்யும்; மென் குழல் மென்மையான புல்லாங்குழலைக்; கொண்டு கொண்டு; பொழில் புக்கு சோலைகளில் புகுந்து; வாய் வைத்து மெல்லிய இசை யெழுப்பி; அவ் ஆயர் தம் பாடி அந்த ஆயர்பாடியிலுள்ள; மென்குழல் பூ அணிந்த; சுருட்டார் சுருண்ட தலைமுடியையுடைய; கன்னியர் வந்து உன்னை பெண்கள் வந்து உன்னை; சுற்றும் நாலுபக்கமும் சூழ்ந்து கொண்டு; தொழ நின்ற வணங்கும் படி; சோதி! சோதி ஸ்வரூபனானவனே; எம்பெருமான்! எம்பெருமான்!; உன்னை உன்னை; பெற்ற பிள்ளையாகப் பெற்ற; குற்றம் அல்லால் குற்றம் தவிர; மற்று இங்கு மற்றபடி; பொருள் தாயம் வேறொரு பொருள் பங்கையும்; இலேன் அறியேன்; அரட்டா! இப்படி தீம்பானவனே!; உன்னை உன்னை என் பிள்ளை என்று நினைத்திருந்தேன்; அறிந்து கொண்டேன் இன்று உண்மை அறிந்துகொண்டேன்; உனக்கு அஞ்சுவன் உனக்கு பால் கொடுக்கவே; அம்மம் தரவே பயப்படுகிறேன்
pŏḻil pukku You enter the grove; kŏṇṭu and with Your; mĕṉ kuḻal flute; maruṭṭār that is mesmerizing; vāy vaittu you play music; kaṉṉiyar vantu uṉṉai the cowherd women; av āyar tam pāṭi of Aiyarpadi; curuṭṭār with soft curly hair; mĕṉkuḻal decorated with flowers; cuṟṟum surrounds You; tŏḻa niṉṟa to worship; coti! You are the light; ĕmpĕrumāṉ! oh Lord!; kuṟṟam allāl my only mistake is; pĕṟṟa is that I raised; uṉṉai You; maṟṟu iṅku other than that; ileṉ I dont see; pŏrul̤ tāyam anything reason; araṭṭā! its hard to handle this; uṉṉai I thought of You as my child; aṟintu kŏṇṭeṉ today I came to know; ammam tarave I am scared; uṉakku añcuvaṉ to give You milk