PAT 3.1.5

விம்மியழுது எதையும் சாதிக்கும் பிள்ளை

227 முப்போதும்கடைந்தீண்டியவெண்ணெயி
னோடு தயிரும்விழுங்கி *
கப்பாலாயர்கள்காவிற்கொணர்ந்த
கலத்தொடுசாய்த்துப்பருகி *
மெய்ப்பாலுண்டழுபிள்ளைகள்போல
நீவிம்மிவிம்மியழுகின்ற *
அப்பா! உன்னைஅறிந்துகொண்டேன்
உனக்குஅஞ்சுவன் அம்மம்தரவே.
227 muppotum kaṭaintu īṇṭiya vĕṇṇĕyiṉoṭu * tayirum vizhuṅki *
kappāl āyarkal̤ kāviṟ kŏṇarnta * kalattŏṭu cāyttup paruki **
mĕyppāl uṇṭu azhu pil̤l̤aikal̤ pola * vimmi vimmi azhukiṉṟa *
appā uṉṉai aṟintukŏṇṭeṉ * uṉakku añcuvaṉ ammam tarave (5)

Ragam

Ārabi / ஆரபி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

227. You swallow the butter and the curd three times a day, that the cowherd women churn and keep. You make the pots that the cowherds carry on their shoulders fall and drink the yogurt. You sob and sob like the children who want to drink milk from their mothers. Dear child, I know who you are and I’m afraid to give you food.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
முப்போதும் காலை மதியம் மாலை; கடைந்து மூன்று வேளையும் கடைந்து; ஈண்டிய கடைந்தெடுத்த; வெண்ணெயினோடு வெண்ணெயையும்; தயிரும் விழுங்கி தயிரையும் விழுங்கிவிட்டு; ஆயர்கள் அந்த ஆயர்கள்; கப்பால் தங்கள் தோள்களில்; காவிற் கொணர்ந்த காவடியில் கொண்டுவந்த; கலத்தொடு பாத்திரத்தோடு; சாய்த்துப் பருகி சாய்த்துப் பாலைப் பருகி; மெய்ப்பால் உண்டு அதன்பின் தாய்ப்பாலும் பருகிவிட்டு; அழு பிள்ளைகள் போல அழும் குழந்தைகள் போல்; நீ விம்மி விம்மி அழுகின்ற விம்மி விம்மி அழும்; அப்பா! அப்பனே!; அறிந்து கொண்டேன் உன்னை அறிந்துகொண்டேன்; உனக்கு அஞ்சுவன் உனக்குப் பயப்படுகிறேன்; அம்மம் தரவே பால் கொடுக்கவே!