PAT 3.1.2

சகடம் இறச் சாடியவன்

224 பொன்போல்மஞ்சனமாட்டிஅமுதூட்டிப்
போனேன் வருமளவுஇப்பால் *
வன்பாரச்சகடம்இறச்சாடி
வடக்கிலகம்புக்கிருந்து *
மின்போல் நுண்ணிடையாள்ஒருகன்னியை
வேற்றுருவம்செய்துவைத்த *
அன்பா! உன்னைஅறிந்துகொண்டேன்
உனக்குஅஞ்சுவன் அம்மம்தரவே.
224 pŏṉpol mañcaṉam āṭṭi amutu ūṭṭip poṉeṉ * varumal̤avu ippāl *
vaṉ pārac cakaṭam iṟac cāṭi * vaṭakkil akam pukku iruntu **
miṉpol nuṇṇiṭaiyāl̤ ŏru kaṉṉiyai * veṟṟuruvam cĕytu vaitta *
aṉpā uṉṉai aṟintukŏṇṭeṉ * uṉakku añcuvaṉ ammam tarave (2)

Ragam

Ārabi / ஆரபி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

224. I gave you bath so that your body glows like gold and fed you food sweet as nectar and went out. Before I came back you killed the Sakatāsuran who came as a fully-laden cart and returned to stay quietly at home. You changed the mind of a young girl with a waist thin as lightning and displaced her clothes. Dear child, I know who you are and I’m afraid to give you food.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பொன் போல் பொன் போல் மின்னிட உன்னை; மஞ்சனம் ஆட்டி நீராட்டி; அமுது ஊட்டி பாலூட்டிவிட்டு; போனேன் நான் வெளியே சென்றேன்; வருமளவு இப்பால் நான் திரும்பி வருவதற்குள்; வன் பார சகடம் வலிமை மிகுந்த சகடாசுரனை; இறச் சாடி அழியும்படி காலால் உதைத்து; வடக்கில் வடக்கிலுள்ள; அகம் புக்கு இருந்து வீட்டில் நுழைந்திருந்து; மின் போல் மின்னலைப் போன்ற; நுண்ணிடையாள் நுண்ணிய இடையுடைய; ஒரு கன்னியை ஒரு பெண்ணை; வேற்று உருவம் அவள் அழகு குலையும்படி; செய்து வைத்த செய்துவிட்டாய்!; அன்பா! உன்னை அன்பனே உன்னை; அறிந்து கொண்டேன் இன்று அறிந்துகொண்டேன்!; அம்மம் தரவே பால் கொடுக்கவே; அஞ்சுவன் பயப்படுகிறேன்
mañcaṉam āṭṭi i gave You bath; pŏṉ pol so that You shine like gold; amutu ūṭṭi fed You; poṉeṉ and I went outside; varumal̤avu ippāl before I came back; iṟac cāṭi You kicked and killed; vaṉ pāra cakaṭam Sakatāsuran, who came as a cart; akam pukku iruntu then entered the house in the; vaṭakkil the north; veṟṟu uruvam and You mischevously; cĕytu vaitta made the beauty fade; ŏru kaṉṉiyai of a girl; nuṇṇiṭaiyāl̤ with a hip; miṉ pol like a lightening; aṉpā! uṉṉai my Dear; aṟintu kŏṇṭeṉ today I came to know who You are; ammam tarave can I give You milk?