PAT 2.6.8

அணைகட்டிக் கடலையடைந்த இராமன்

179 மின்னிடைச் சீதைபொருட்டா * இலங்கையர்
மன்னன்மணிமுடி பத்தும்உடன்வீழ *
தன்னிகரொன்றில்லாச் சிலைகால்வளைத்திட்ட *
மின்னுமுடியற்குஓர்கோல்கொண்டுவா
வேலையடைத்தாற்குஓர்கோல்கொண்டுவா.
179 miṉṉiṭaic cītai pŏruṭṭā * ilaṅkaiyar *
maṉṉaṉ maṇimuṭi * pattum uṭaṉ vīzha **
taṉ nikar ŏṉṟu illāc * cilai kāl val̤aittu iṭṭa *
miṉṉu muṭiyaṟku or kol kŏṇṭu vā * velai aṭaittāṟku or kol kŏṇṭu vā (8)

Ragam

Dēshi / தேசி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

179. For the sake of Sitā, with a waist as thin as lightning he bent his matchless bow and made the ten heads of Ravanā, crowned with diamonds, roll on the ground O crow, bring a grazing stick for him, Bring a grazing stick for him, adorned with a shining crown. Bring the grazing stick for the lord who built a bridge over the ocean to go to Lankā.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மின் இடை இடை மெலிந்த; சீதை பொருட்டா சீதா பிராட்டியை மீட்க; இலங்கையர் இலங்கை; மன்னன் மணிமுடி மன்னனின் மணிமுடி; பத்தும் உடன் வீழ பத்தும் மொத்தமாக விழ; தன்னிகர் ஒன்று இல்லா நிகரற்ற; சிலை கால் வளைத்திட்ட வில்லை வளைத்திட்ட; மின்னு சோபையுடைய; முடியற்கு கிரீடம் அணிந்தவனுக்கு; ஓர் கோல் கொண்டு வா ஒரு கோலைக் கொண்டு வா; வேலை கடலில்; அடைத்தாற்கு அணை கட்டிய பிரானுக்கு; ஓர் கோல் கொண்டு வா ஒரு கோலைக் கொண்டுவா
cītai pŏruṭṭā to rescue mother Sita; miṉ iṭai who had thin waist; cilai kāl val̤aittiṭṭa Lord Rama used His bow; taṉṉikar ŏṉṟu illā that was unmatched; pattum uṭaṉ vīḻa and brought down the ten heads; maṉṉaṉ maṇimuṭi of the crowned king of; ilaṅkaiyar Lanka; muṭiyaṟku for the One with crown; miṉṉu that shines; or kol kŏṇṭu vā bring a grazing stick; aṭaittāṟku for the One who built a bridge; velai in the ocean; or kol kŏṇṭu vā bring a grazing stick