PAT 2.6.7

கற்றைக் குழலழகன்

178 பொன்திகழ் சித்திரகூடப்பொருப்பினில் *
உற்றவடிவில் ஒருகண்ணும்கொண்ட * அக்
கற்றைக்குழலன் கடியன்விரைந்து உன்னை *
மற்றைக்கண்கொள்ளாமேகோல்கொண்டுவா
மணிவண்ணநம்பிக்குஓர்கோல்கொண்டுவா.
178 pŏṉtikazh * cittirakūṭap pŏruppiṉil *
uṟṟa vaṭivil * ŏru kaṇṇum kŏṇṭa ** ak
kaṟṟaik kuzhalaṉ * kaṭiyaṉ viraintu uṉṉai *
maṟṟaik kaṇ kŏl̤l̤āme kol kŏṇṭu vā * maṇivaṇṇa nampikku or kol kŏṇṭu vā (7)

Ragam

Dēshi / தேசி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

178. O crow, when he, as Rāma, stayed on golden Chitrakoodam mountain, he plucked Jayantha's one eye when he came in the form of a crow and glanced at Sitā with a wrong intention. Bring a grazing stick quickly for my thick-haired son before he gets angry and destroys the other eye of the crows. Bring a grazing stick to this dear child, the shining sapphire-colored lord.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பொன் திகழ் பொன் போன்ற பொலிவுடைய; சித்திரகூட சித்திரகூடம் என்னும்; பொருப்பினில் மலையிலே; உற்ற வடிவில் சீதையின் அழகை துர்நோக்குடன் பார்த்த போது; ஒரு கண்ணும் கொண்ட உன் ஒரு கண்ணை பறித்த; அக்கற்றை அடர்ந்த தலை; குழலன் முடியுடைய பிரான்; கடியன் விரைந்து உன்னை கடியனாகி விரைவாக உன்; மற்றைக் கண் மற்றொரு கண்ணையும்; கொள்ளாமே கொள்ளாதிருக்க; கோல் கொண்டு வா ஒரு கோல் கொண்டுவா; மணிவண்ணன் நம்பிக்கு நீல மணி வண்ணப் பெருமானுக்கு; ஓர் கோல் கொண்டு வா ஒரு கோலைக் கொண்டுவா
cittirakūṭa at the Chitrakoodam; pŏruppiṉil mountain; pŏṉ tikaḻ which had a golden radiance; uṟṟa vaṭivil when glanced at Sitā with a wrong intention; ŏru kaṇṇum kŏṇṭa Rama plucked one of the eyes of the asura who came as a crow; kuḻalaṉ the Lord with; akkaṟṟai dense hair; kaṭiyaṉ viraintu uṉṉai before He becomes angry and pluck; maṟṟaik kaṇ the other eye; kŏl̤l̤āme and kill you; kol kŏṇṭu vā bring a grazing stick; maṇivaṇṇaṉ nampikku for the shining sapphire-colored lord; or kol kŏṇṭu vā bring a grazing stick