PAT 2.6.5

ஸ்ரீ பார்த்தசாரதி

176 சீரொன்றுதூதாய்த் துரியோதனன்பக்கல் *
ஊரொன்றுவேண்டிப் பெறாதஉரோடத்தால் *
பாரொன்றிப் பாரதம்கைசெய்து பார்த்தற்குத் *
தேரொன்றையூர்ந்தாற்குஓர்கோல்கொண்டுவா
தேவபிரானுக்குஓர்கோல்கொண்டுவா.
176 cīr ŏṉṟu tūtāyt * turiyotaṉaṉ pakkal *
ūr ŏṉṟu veṇṭip * pĕṟāta uroṭattāl **
pār ŏṉṟip pāratam * kaicĕytu pārttaṟkut *
ter ŏṉṟai ūrntāṟku or kol kŏṇṭu vā * tevapirāṉukku or kol kŏṇṭu vā (5)

Ragam

Dēshi / தேசி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

176. O crow, Kannan went as a messenger to Duryodhanā asking him to give the Pāndavās’ land back to them, When Duryodhanā refused to give them even one town. Kannan angrily started the Bhārathā war, drove Arjunā’s chariot in the battle and got victory for the Pāndavās. O crow, bring a grazing stick for the god of gods, the conqueror of the Kauravās.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சீர் ஒன்று தூதாய் சிறந்த ஒரு தூதனாய்; துரியோதனன் பக்கல் துரியோதனனிடம் சென்று; ஊர் ஒன்று பாண்டவர்களுக்கு ஊர் ஒன்றைத் தா; வேண்டி என வேண்டி; பெறாத உரோடத்தால் அது கிடைக்காத கோபத்தால்; பார் ஒன்றிப் பாரதம் பாரதப் போருக்கு; கை செய்து பார்த்தற்கு கைகொடுத்து அர்ஜுனனுக்கு; தேர் ஒன்றை ஊர்ந்தாற்கு தேரோட்டியவனுக்கு; ஓர் கோல் கொண்டு வா ஒரு கோலைக் கொண்டுவா; தேவபிரானுக்கு தேவாதி தேவனுக்கு; ஓர் கோல் கொண்டு வா ஒரு கோலைக் கொண்டுவா
turiyotaṉaṉ pakkal Kannan went to see Duryodhana; cīr ŏṉṟu tūtāy as a great messenger; veṇṭi and asked them; ūr ŏṉṟu to give one town to Pandavas; pĕṟāta uroṭattāl when that was refused Kannan; kai cĕytu pārttaṟku He gave a helping hand to Arjuna; ter ŏṉṟai ūrntāṟku and drove his chariot; pār ŏṉṟip pāratam in the Baratha war; or kol kŏṇṭu vā bring a grazing stick; tevapirāṉukku for the God of gods; or kol kŏṇṭu vā bring a grazing stick