PAT 2.6.3

கம்சனைக் கொன்ற தேவபிரான்

174 கறுத்திட்டுஎதிர்நின்ற கஞ்சனைக்கொன்றான் *
பொறுத்திட்டுஎதிர்வந்த புள்ளின்வாய்கீண்டான் *
நெறித்தகுழல்களை நீங்கமுன்னோடி *
சிறுக்கன்றுமேய்ப்பாற்குஓர்கோல்கொண்டுவா
தேவபிரானுக்குஓர்கோல்கொண்டுவா.
174 kaṟuttiṭṭu ĕtirniṉṟa * kañcaṉaik kŏṉṟāṉ *
pŏṟuttiṭṭu ĕtirvanta * pul̤l̤iṉ vāy kīṇṭāṉ **
nĕṟitta kuzhalkal̤ai * nīṅka muṉ oṭi *
ciṟukkaṉṟu meyppāṟku or kol kŏṇṭu vā * tevapirāṉukku or kol kŏṇṭu vā (3)

Ragam

Dēshi / தேசி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

174. O crow, he killed the angry Kamsan who opposed Him He split open the mouth of Bakasura who came as a heron to fight with him. Bring a suitable grazing stick for my son running and grazing small calves, as his curly hair sways around. Bring a grazing stick for the god of gods.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கறுத்திட்டு எதிர் நின்ற கோபத்துடன் எதிர்த்த; கஞ்சனைக் கொன்றான் கம்சனை மாளச் செய்தவனும்; பொறுத்திட்டு எதிர் வந்த பொறுத்து பார்த்து விட்டு; புள்ளின்வாய் பறவை உருவத்தில் வந்த பகாசூரனை; கீண்டான் கிழித்தவனுமான; நெறித்த குழல்களை அடர்ந்த தலைமுடியை; நீங்க முன்னோடி அலங்கிடும்படி வேகமாக ஓடி; சிறுக் கன்று இளங் கன்றுகளை; மேய்ப்பாற்கு மேய்ப்பவனுக்கு; ஓர் கோல் கொண்டு வா ஒரு கோலைக் கொண்டுவா; தேவபிரானுக்கு தேவர் அதிபதிக்கு; ஓர் கோல் கொண்டு வா ஒரு கோலைக் கொண்டுவா
kañcaṉaik kŏṉṟāṉ He killed Kamsan; kaṟuttiṭṭu ĕtir niṉṟa who opposed furiously; pŏṟuttiṭṭu ĕtir vanta after waiting; kīṇṭāṉ He split open the mouth of; pul̤l̤iṉvāy Bakasura, who came like a bird; nĕṟitta kuḻalkal̤ai His dense curly hair; nīṅka muṉṉoṭi sways as He runs fast; meyppāṟku for the One who grazes; ciṟuk kaṉṟu the calves; or kol kŏṇṭu vā bring a grazing stick; or kol kŏṇṭu vā bring a grazing stick; tevapirāṉukku for the God of gods