PAT 2.6.10

மக்களைப் பெற்று மகிழ்வர்

181 அக்காக்காய். நம்பிக்குக் கோல்கொண்டுவாவென்று *
மிக்காளுரைத்தசொல் வில்லிபுத்தூர்ப்பட்டன் *
ஒக்கவுரைத்த தமிழ்பத்தும்வல்லவர் *
மக்களைப்பெற்று மகிழ்வர்இவ்வையத்தே.
181 ## akkākkāy nampikkuk * kol kŏṇṭu vā ĕṉṟu *
mikkāl̤ uraitta cŏl * villiputtūrp paṭṭaṉ **
ŏkka uraitta * tamizh pattum vallavar *
makkal̤aip pĕṟṟu * makizhvar iv vaiyatte (10)

Ragam

Dēshi / தேசி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

181. The Pattan of Villiputhur composed pāsurams using the words of Yashodā as she asked the crow to bring a grazing stick to her beloved child. If devotees recite these ten Tamil pāsurams they will get good children and live happily in the world.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அக்காக்காய்! ஏ காகமே!; நம்பிக்குக் நம் பிரானுக்கு; கோல் கொண்டு வா ஒரு கோலைக் கொண்டுவா; என்று மிக்காள் என்று மேன்மையானவளான யசோதை; உரைத்த சொல் உரைத்தவற்றை; வில்லிபுத்தூர்ப் பட்டன் வில்லிபுத்தூர் பெரியாழ்வார்; ஒக்க உரைத்த அவள் சொன்னதுபோல் அருளிச்செய்த; தமிழ் பத்தும் வல்லவர் பத்துப் பாசுரங்களை ஓதுபவர்கள்; மக்களைப் பெற்று நல்ல புத்திரர்களைப் பெற்று; இவ் வையத்தே இப்பூமியிலே; மகிழ்வர் மகிழ்ந்திருக்கப்பெறுவர்
akkākkāy! Oh crow!; kol kŏṇṭu vā bring a grazing stick; nampikkuk for our Lord; villiputtūrp paṭṭaṉ Periazhwar of Villiputhur; ŏkka uraitta composed these pasurams; uraitta cŏl using the words of; ĕṉṟu mikkāl̤ mother Yashoda; tamiḻ pattum vallavar those who recite these ten pasurams; makkal̤aip pĕṟṟu will get good children; makiḻvar and live happily; iv vaiyatte in this world